நீலாங்கரை | ஏப்ரல் 6:-

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது கவனம் ஈர்த்துள்ளது.

நடிகர் விஜய் நீலாங்கரையிலுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்தார். அவர் அங்கு வந்த விதம் அனைவரின் பார்வையையும் அவர் மீது திருப்பியது. காரணம் முகக்கவசம் அணிந்து சைக்கிள் ஓட்டியபடி அங்கு வந்து இரசிகர்களை ஆச்சயத்தில் ஆழ்த்தினார்.

அவரைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உற்சாக குரல் எழுப்பினர். விஜய் வாக்களிக்க வந்து சென்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பேசுபொருளாக மாறியிருக்கிறது.

ஒரு வேலை பெட்ரோல் விலை உயர்வை இப்படி குறியீடாக அவர் சொல்லியிருக்கிறாரோ என விஜய் இரசிகர்கள் இனையத்தில் விவாதிக்க தொடங்கி விட்டனர்.

சைக்கிளில் வந்த அவர் ஸ்கூட்டரில் திரும்பிச் சென்றார்.