திருவான்மியூர் | ஏப்ரல் 6:-

நடிகர் அஜித் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னரே வந்ததால் அவர் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடிகர் அஜித், மனைவி ஷாலினியுடன் வாக்களிக்க திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளார்.

திருவான்மியூர் கார்ப்பரேஷன் பள்ளிக்கு வாக்கு சாவடிக்கு நடிகர் அஜித் வருகை தந்த உடன் அவரது காரை பார்த்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டுள்ளனர். ரசிகர்கள் கூட்டம் அதிகரித்ததை அடுத்து நுழைவு வாயிலிருந்து அவரை பாதுகாப்புடன் போலீசார் அழைத்து சென்றுள்ளனர். வாக்கு சாவடிக்குள் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி வாக்களிக்க காத்திருந்தனர்.

நடிகர் அஜித் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னரே வந்ததால் அவர் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார். முதல் வாக்களராக நடிகர் அஜித் தனது வாக்கை பதிவு செய்தார், அதை தொடர்ந்து அஜித் மனைவி ஷாலினியும் வாக்களித்து சென்றார்.