மதுரை | ஏப்ரல் 6:-

மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோரிப்பாளையம் – மீனாட்சி கல்லூரியில் குடும்பத்துடன் வாக்களிக்க வந்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

காலை 8:45 மணிக்கு வாக்குச்சாவடிக்கு உள்ளே சென்ற செல்லூர் ராஜுவின்  வாக்காளர் விபரங்கள் சரி பார்க்கப்பட்ட பின்னர் வாக்கு பதிவு செய்தார். ஆனால், அவருடைய வாக்கு பதிவாகவில்லை.

கன்ட்ரோல் யூனிட் கருவியில் இணைக்கப்பட்டிருந்த வயர் இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவருடைய வாக்கு பதிவாகவில்லை என்று வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர் தகவல் தெரிவித்தார்.

அதன் காரணமாக வாக்குச்சாவடிக்கு உள்ளேயே நாற்காலியில் 15 நிமிடங்களுக்கு மேலாக காத்திருந்தார். பின்னர், பொறியாளர்கள் வந்து பழுதை சரி செய்ததை தொடர்ந்து அவருடைய வாக்கைப் பதிவு செய்தார்.

சரியாக 25 நிமிடங்கள் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ. இதனால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பதட்டமான சூழல் நிலவியது.

.