கோலாலம்பூர் | ஏப்ரல் 7:-

பல்வேறு இந்திய சமூகங்களின் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், ஆஸ்ட்ரோ உள்ளூர் நிகழ்ச்சிகள் மற்றும் திறமைகளை கொண்டாடும் வண்ணம் முதல் ஒளிபரப்புக் காணும் 6 உள்ளூர் நிகழ்ச்சிகளைப் பெருமையுடன் வழங்குகிறது: கைக துருன், கச்சேரி; ஓ’ யாரா ஆயி வைசாக்கி, வைசாக்கி சிறப்பு இசை நிகழ்ச்சி; ஜெகதானந்தக்காரக, உகாதி சிறப்பு டெலிமூவி; விஷூப்புலரி, விஷூ சிறப்பு இசை நிகழ்ச்சி; சாரா, சித்திரைப் புத்தாண்டு சிறப்பு டெலிமூவி; மற்றும் சுப்ரமணி, முதல் உள்ளூர் தமிழ் நகைச்சுவைக்-கற்பனைத் தொடர்.

ஆஸ்ட்ரோவின் இந்திய அலைவரிசை வியாபாரத் துணைத் தலைவர் மார்க் லூர்ட்ஸ் கூறுகையில், “தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் பஞ்சாபி போன்ற மொழிகளில் புதிய, உள்ளூர் நிகழ்ச்சிகளையும் இந்தியாவிலிருந்துப் பிரீமியம் நிகழ்ச்சிகளையும் இவ்வாண்டு இந்திய சமூகம் கண்டு மகிழ முடியும். வாடிக்கையாளர்கள் இந்நிகழ்ச்சிகளை எப்போது வேண்டுமானாலும் ஆன் டிமாண்ட் மற்றும் ஆஸ்ட்ரோ கோ போன்றவற்றில் ஸ்ட்ரீம் செய்யலாம். எங்களின் ஆஸ்ட்ரோ உலகம் டிஜிட்டல் தளத்தைப் பின்தொடர்பவர்களுக்குக் கடந்த தீபாவளியைப் போலவேப் புத்தம் புதிய, பிரத்தியேகமானப் புத்தாண்டுச் சிறப்பு வலைத்தளத் தொடரை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். பிரபலமான உள்ளூர் கலைஞர்களைக் கொண்ட மெய்நிகர் இசை நிகழ்ச்சியை ராகாவில் நாங்கள் வழங்குகிறோம். உகாதி சுபகாஞ்சலு, விஷூ ஆஷம்சகல், வைசாக்கி தியான் லக் லக் வதையன், மற்றும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஆகியப் பண்டிகை வாழ்த்துக்களை எங்களின் இந்திய நண்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த 25 ஆண்டுகளாக ஆஸ்ட்ரோவை ஆதரித்தமைக்கு நன்றி. இன்னும் பல ஆண்டுகள் உங்களை மகிழ்விப்பதை நாங்கள் எதிர்பார்ப்க்கிறோம்.”

ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் முதல் ஒளிபரப்புக் காணும் கீழ்க்காணும் உள்ளூர் நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம்:

  • டார்க்கி, ஓஜி தாஸ், மிஸ்டா ஜி, லாக்கப் நாதன், லாக்கப் சேவியர், எஸ்பி ரகு, கோகோ நந்தா மற்றும் பல பிரபலமான உள்ளூர் கலைஞர்களைச் சித்தறிக்கும் கைக துருன் கச்சேரியைப், பிரபலத் திரைப்பட இயக்குநர், தேவ் ராஜா இயக்கியுள்ளார். புன்னகைப் பூகீதா மற்றும் ஜெயா இராஜேந்திரன் இக்கச்சேரியைத் தொகுத்து வழங்கியுள்ளனர்.
  • சுப்ரமணி எனும் நகைச்சுவைக்-கற்ப்பனைத் தொடர் மற்றும் ரோபோவைச் சித்தறிக்கும் முதல் உள்ளூர் தமிழ் தொடரை உள்ளூர் திரைப்பட இயக்குநர் முரளிகிருஷ்ணன் முனியன் இயக்கியுள்ளார். இதில் மகேந்திரன் இராமன்,  தாஷாயினி, கபிலன் மற்றும் ஹேமாஜி ஆகியோர் நடித்துள்ளனர்.
  • ஓ’ யாரா ஆயி வைசாக்கி, ‘வைசாக்கி-சிறப்பு பஞ்சாபி இசை நிகழ்ச்சியை உள்ளூர் திறமைசாலி, எஸ் ஏ துரை இயக்கியுள்ளார்.  மலேசிய கலைஞர்களான அர்விந்தர் ரைய்னா, கிரட் சிங், அஸ்விந்தர் கோர் மற்றும் பலரைக் கொண்ட இவ்விசை நிகழ்ச்சி, வைசாக்கி கொண்டாட்டத்தின் பாரம்பரிய அம்சங்கள் மற்றும் அற்புதமான படைப்புகளைச் சித்தறிக்கின்றது.

  • உள்ளூர் திறமைகளானப் பிரகாஷ் ராவ், கோமலா நாயுடு, சரத் குமார் மற்றும் வானிஷ்ரி ஆகியோர் நடித்த ஜெகதானந்தக்காரக எனும் ‘உகாதி’-சிறப்பு தெலுங்கு சஸ்பென்ஸ் டெலிமூவியை உள்ளூர் இயக்குநர் நவின் சாம்ராத் இயக்கியுள்ளார்.
  • பிரபல மலேசியக் கலைஞர்களான டத்தின் ஸ்ரீ ஷைலா, வாணி நேத்தியர், சாஸ்தன் கே, சபேஷ் மன்மதன், ஹஷ்மித்தா செல்வம் மற்றும் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ் ஆகியோரைக் கொண்டக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைச் சித்தறிக்கும் விஷூப்புலரி எனும்  ‘விஷூ’ சிறப்பு மலையாள இசை நிகழ்ச்சியை உள்ளூர் இயக்குநர் எஸ் எ துரை இயக்கியுள்ளார்.
  • சாரா எனும் ‘சித்திரைப் புத்தாண்டு’-சிறப்பு தமிழ் திகில் டெலிமூவியை ஷாலினி பாலசுந்தரம் இயக்கி, தயாரித்து, நடித்துள்ளார். தேவியானா, கிருத்திகா நாயர் மற்றும் வெமன்னா ஆகிய பிற கலைஞர்களும் இதில் நடித்துள்ளனர

வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம், ‘தலைவி’ மற்றும் அதிரடி-நாடகத் திரைப்படம், ‘கர்ணன்’ ஆகியத் திரைப்படங்களின் குழுவினர்கள் கலந்துக் கொள்ளும் தலைவி ஸ்பெஷல் மற்றும் கர்ணன் ஸ்பெஷல் சிறப்பு நேர்காணல்கள்; ஜீவா, அருள்நிதி தமிழரசு, மஞ்சிமா மோகன் மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்த நாடகம் மற்றும் விளையாட்டுத் திரைப்படம், களத்தில் சந்திப்போம்; கலைமாமணி திண்டுக்கல் ஐ. லியோனி பங்கேற்க்கும் பேச்சு நிகழ்ச்சி, ஸ்பெஷல் பட்டிமன்றம்; விளையாட்டு நிகழ்ச்சி, மொய் விருந்து; பிரபல இந்திய நடிகர் விஜய் சேதுபதி குரலில் மலர்ந்த வரலாற்றுப் புனைக்கதை அனிமேஷன்,  தீர ஆகிய முதல் ஒளிப்பரப்புக் காணும் நிகழ்ச்சிகள்; மற்றும் புகழ்பெற்றப் பாடகர்களானத் தேவி ஸ்ரீ பிரசாத், மனோ, ஸ்ரீநிவாஸ் மற்றும் பலர் பங்கேற்க்கும் ராக்ஸ்டார் எனும் புத்தம் புதிய பிரபலங்களுக்கான இசை ரியாலிட்டி நிகழ்ச்சியின் புதிய அத்தியாயங்கள் ஆகிய சர்வதேச நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.

மேலும், அனைத்து மலேசியர்களும் உள்ளூர் இயக்குநர், சதீஷ் நடராஜன் இயக்கிய ஆஸ்ட்ரோ உலகத்தில் முதல் ஒளிபரப்புக் காணும் நியூ யர் கலாட்டா எனும் குடும்ப நாடக வலைத்தளத் தொடரை ஸ்ட்ரீம் செய்யலாம். இவ்வலைத்தளத் தொடரில் உள்ளூர் கலைஞர்களானத் திவாகரன், சந்தியா, மணிவண்ணன், மேஷாலினி, சக்தி, வினீத் மேனன், கிருத்திகா மற்றும் பலர் நடித்துச் சிறப்பித்துள்ளனர். அதுமட்டும்மின்றி, வானொலி முன்நிலையில், ராகா ரசிகர்கள், ராகா முகநூலில் முதல் ஒளிபரப்புக் காணும் என்ன மேட்டர்’னா சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் எனும் மெய்நிகர் இசை நிகழ்ச்சியை ஸ்ட்ரீம் செய்யலாம்.

மேலும், அனைத்து மலேசியர்களும் உள்ளூர் இயக்குநர், சதீஷ் நடராஜன் இயக்கிய ஆஸ்ட்ரோ உலகத்தில் முதல் ஒளிபரப்புக் காணும் நியூ யர் கலாட்டா எனும் குடும்ப நாடக வலைத்தளத் தொடரை ஸ்ட்ரீம் செய்யலாம். இவ்வலைத்தளத் தொடரில் உள்ளூர் கலைஞர்களானத் திவாகரன், சந்தியா, மணிவண்ணன், மேஷாலினி, சக்தி, வினீத் மேனன், கிருத்திகா மற்றும் பலர் நடித்துச் சிறப்பித்துள்ளனர். அதுமட்டும்மின்றி, வானொலி முன்நிலையில், ராகா ரசிகர்கள், ராகா முகநூலில் முதல் ஒளிபரப்புக் காணும் என்ன மேட்டர்’னா சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டம் எனும் மெய்நிகர் இசை நிகழ்ச்சியை ஸ்ட்ரீம் செய்யலாம்.

(நிகழ்ச்சிகளின் முழுமையான TX விவரங்களுக்குப் பின் இணைப்பை அணுகவும்)

மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.