கோலாலம்பூர் | ஏப்ரல் 8:-

முதற்கட்டத்தில் உள்ள 346,270 பேருக்கு இரண்டாவது கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டது. இந்த எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி கணக்கிடப்பட்டதாகும்.

இதே கால வரையறையில், 546,762 பேருக்கு முதல் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ அடாம் பாபா தெரிவித்தார்.

முதலாவது கோவிட்-199 தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலவரம் பின்வருமாறு :

சிலாங்கூர் : 74,659
சரவாக் : 56,587
பேரா : 52,032
சபா : 50,918
கோலாலம்பூர் : 49,114

இரண்டாவது கோவிட்-19 தடுப்பூசி பெற்றவர்களின் நிலவரம் பின்வருமாறு :

சிலாங்கூர் : 44,776
சபா : 36,956
பேரா : 34,235
கோலாலம்பூர் : 30,421
சரவாக் : 29,332

Program Imunisasi COVID-19 Kebangsaan | | Utusan Borneo Online

இந்நிலையில், தேசியக் கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் பதிந்து கொண்டவர்களின் எண்ணிக்கை இது வரையில் 8,235,692ஐ எட்டியுள்ளது. இந்த எண்ணிக்கையில் 33.9 % அதாவது 2,224,996 பதிவுகள் சிலாங்கூர் மாநிலத்தைச் சார்ந்ததாகும்.

தேசியக் கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின்படி, முதற்கட்டமாக பிப்பரவரி முதல் ஏப்ரல் வரையிலானக் காலத்தில் 500,000 முன்களப் பணியாளர்களை உட்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இரண்டாம் கட்டத் தடுப்பூசித் திட்டம் ஏப்ரல் தொடங்கி ஆகஸ்டு வரை நீடிக்கும். இந்தக் காலக்கட்டத்தில் 9.4 மில்லியன் பேரை உட்படுத்திய பிரிவில், 60 வயதுக்கும் மேற்பட்ட முதியோர், ஆபத்தான நோய் கொண்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இணைக்கப்படுவர்.

மூன்றாம் கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இவ்வாண்டு மே மாதம் தொடங்கி அடுத்தாண்டு பிப்பரவரி மாதம் வரை கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படும்.