பியூனஸ்அயர்ஸ் | ஏப்ரல் 10:-

கோவிட்-19 பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட 2-வது புரோ ஹாக்கி லீக் போட்டி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இதன் அடுத்த 2 லீக் ஆட்டங்களில் இந்திய அணி, ஒலிம்பிக் வெற்றியாளரான அர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டங்கள் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ்அயர்சில் முறையே இன்றும், நாளையும் நடக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு நடந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. மற்றோர் ஆட்டத்தில் 4-4 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.

ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு அனைத்துலகப் போட்டியில் களம் காணும் இந்திய அணி முந்தையப் பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டதால் நம்பிக்கையுடன் களம் இறங்கும் என்று நம்பலாம்.

– நன்றி : தினத்தந்தி