பத்துமலை | 11 ஏப்ரல் 2021

தீர்மானம் 1 ( தமிழ்மொழிக் காப்பகம்)

மலேசியக் கல்வி அமைச்சு, மலேசியத் தமிழ்மொழிக் காப்பகத்திற்கு வழங்கிய ஆதரவையும்  அங்கீகாரத்தையும் இம்மாநாடு வரவேற்கின்றது. இக்காப்பகம் மேலும் பயன்விளைவு மிக்க வகையில் செயல்பட, உறுதிப்பாடுடைய ஒத்துழைப்பையும் ஆதரவையும் கல்வி அமைச்சு வலுப்படுத்த வேண்டும் எனவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது.

மலேசிய அரசின் அமைச்சரவையிலுள்ள தமிழ் அமைச்சர் ஒருவரை இக்காப்பகத்தின் இணைத்தலைவராக நியமனம் செய்ய வேண்டுமாயும் இம்மாநாடு கேட்டுக்கொள்கின்றது. 

தீர்மானம் 2 ( பொங்கல் கலாச்சார விழா)

2012ஆம் ஆண்டு முதல் பொங்கலை ஒரு பண்பாட்டு விழாவாக நம் நாட்டுத் தேசியத் தலைவர்கள் தேசிய நிலையில் கொண்டாடி வருகின்றனர். மலேசிய அரசு இந்நிலைப்பாட்டினைத் தொடர்ந்து கொண்டிருப்பதோடு, பொங்கலை தமிழரின் பண்பாட்டு விழவாகக் கருதுவதோடு, அதனை  நாட்டின் தேசிய அடையாளங்களுள் ஒன்றாக ஏற்று அங்கீகரிக்க வேண்டும்

 தீர்மானம் 3  ( தமிழ்ப்புத்தாண்டு)

சமய வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், தமிழர்கள் கொண்டாடும் ஜனவரி 14 அல்லது  தை மாதம் 1ஆம் தேதியே  தமிழ்ப் புத்தாண்டு என்று மாநாடு மலேசிய அரசாங்கத்திற்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றது. இந்நாளை மலேசிய அரசு, சீனப் புத்தாண்டைப் போன்று,  தமிழ்ப் புத்தாண்டினையும் சமய வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், தமிழர்கள் கொண்டாடும் ஜனவரி 14 அல்லது  தை மாதம் 1ஆம் தேதியே  தமிழ்ப் புத்தாண்டு என்று மாநாடு மலேசிய அரசாங்கத்திற்கு அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றது. இந்நாளை மலேசிய அரசு, சீனப் புத்தாண்டைப் போன்று,  தமிழ்ப் புத்தாண்டினையும் பொதுவிடுப்பாக அறிவிக்க வேண்டும் எனும் கோரிக்கையினையும் இம்மாநாடு முன்வைக்கின்றது.

தீர்மானம் 4 (தமிழர் திருநாள்)

தமிழர் அமைப்புகள் தமிழர் திருநாள் விழாவைக் கடந்த காலங்களைப் போல் தைமாதம் முழுவதும் மாவட்ட, மாநில அளவில் நடத்தி பின்னர் தேசிய அளவில் நடத்த வேண்டும் என இந்த மாநாடு பரிந்துரைக்கிறது.

தீர்மானம் 5 (தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைந்த பேரவை பதிவு)

ஒருங்கிணைந்த தமிழ் சார்ந்த அமைப்பை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்ய இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது. அதற்கான சட்டவிதிகளை  தயாரிப்பதற்கும் பதிவிற்கான பணிகளை முன்னெடுக்கவும் ஒரு செயற்குழுவை இந்த மாநாடு தேர்வு செய்ய வேண்டும் .

-முற்றும்-