புதன்கிழமை, நவம்பர் 13, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > ஊடக சுதந்திரம் ஒருவரை வஞ்சம் தீர்க்கவும் அழிப்பதிலும் இருக்ககூடாது! -டத்தோ எம்.சரவணன்
மற்றவைமுதன்மைச் செய்திகள்

ஊடக சுதந்திரம் ஒருவரை வஞ்சம் தீர்க்கவும் அழிப்பதிலும் இருக்ககூடாது! -டத்தோ எம்.சரவணன்

கோலாலம்பூர், செப். 10-
ஊடக சுதந்திரம் என்பது மக்கள் மற்றும் நாட்டின் மேம்பாட்டிற்கு வித்திடக்கூடியதாக இருக்க வேண்டும். மாறாக, தனிப்பட்ட முறையில் வஞ்சத்தை தீர்ப்பதற்கும் ஒருவரை தாக்கி அழிக்கும் வகையிலும் அது இருக்கக்கூடாது என இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் தெரிவித்தார்.

ஆக்ககரமான விமர்சனங்கள் வரவேற்கக்கூடியது. ஆரோக்கியமானது. ஆனால், விமர்சனம் என்ற பெயரில் அவதூறுகளை பரப்பக்கூடாது. ஊடக சுதந்திரம் சமூக கடப்பாட்டோடு ஒன்றிணைந்து இருக்க வேண்டும். அதோடு, ஊடக சுதந்திரத்தின் கண்ணியம் எப்பொழுதும் உறுதிபடுத்தப்பட வேண்டும் என கூட்டரசு பிரதேச ம.இ.கா. தலைவருமாகிய அவர் கூறினார்.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மற்றும் மாநாடு இன்று மலாயாப் பல்கலைக்கழகத்திலுள்ள துங்கு வேந்தர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய டத்தோ சரவணன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மக்களுக்கு நல்ல கொள்கைகளை கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான டாக்டர் எம்.ஜி.ஆர். ஊடகங்களை அறிவார்ந்த முறையில் பயன்படுத்தினார். அவரை போல் அனைவரும் முன்மாதிரியாக கொள்ள வேண்டும் என அவர் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன