கோலாலம்பூர் | ஏப்ரல் 23:-

ஆஸ்ட்ரோ தனியார் தொலைக்காட்சியில் வானவில் சூப்பர் ஸ்டார், கண்ணாடி போன்ற நிகழ்ச்சிகளில் இயக்குனரான தேவ் தற்கொலை செய்து கொண்டார்.

பல்வேறான நிகழ்ச்சிகளின் இயக்குனராகவும் கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் இவர் பணியாற்றி வந்துள்ளார். மலேசியாவில் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் நன்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முழுமையான ஈடுபாடு உடையவர். ஒரு நிகழ்ச்சி வெற்றியடைவதற்கு கடுமையாக உழைக்கும் கலைஞரான அவர் மரணமடைந்தது மலேசிய கலைைத் துறையை வெகுவாகப் பாதித்துள்ளது

படப்பிடிப்பிற்காக தங்கி இருந்த விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அநேகன் இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.

கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தேவ்தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கடினமான சூழலைக் குறிப்பிட்டு காணொலி ஒன்றினை வெளியிட்டிருந்தார். அந்தக் காணோலி இணைப்பு பின்வருமாறு:

https://www.instagram.com/tv/CN6yiFrFMs-/?utm_source=ig_web_copy_link