கோலாலம்பூர் | ஏப்ரல் 23:-

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை

வியாழன், 29 ஏப்ரல்
இஸ் லவ் இனாவ் சார் (Is Love Enough? Sir) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: டில்லோட்டாமா ஷோம் & விவேக் கோம்பர்
கணவனை இழந்த ஒரு பெண், ஒரு பணக்காரக் கட்டிடக் கலைஞரின் வீட்டு உதவியாளராகப் பணியில் சேர்கிறார். ஆனால், அவர்களுக்கு இடையில் ஓர் ஈர்ப்பு வளர்கிறது. இருப்பினும், சமூக இடைவெளி இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.

வெள்ளி, 30 ஏப்ரல்
எட்டுத்திக்கும் பற (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்: சமுத்திரக்கனி & சந்தினி தமிழரசன்
அரசாங்கத்தின் இருண்டப் பக்கத்தில் அம்பேத்கர் என்ற சமூக ஆர்வலர் ஈடுபடுகிறார்.

வீக்கெண்ட் வித் ஸ்டார்ஸ் *மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்குச் சமர்ப்பணம்
ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 223), இரவு 10 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
தொகுப்பாளினி: சுஹாசினி மணிரத்னம்
சுஹாசினி மணிரத்னம் தொகுத்து வழங்கும் ஒரு பிரபல தமிழ் உரையாடல் நிகழ்ச்சி. திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் குறித்து அவர்களிடம் தொகுப்பாளினி உரையாடுவார்.

சனி, 1 மே
மிருகா (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்) *மலேசியாவில் பிரத்தியேகமாக ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது
ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 223), இரவு 10 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: ஸ்ரீகாந்த் & ராய் லக்ஷ்மி
ஒரு கோடீஸ்வரியின் பணத்தின் மீது மோகம் கொண்ட ஒரு தொடர் கொலையாளி அப்பணத்தை கொள்ளையடிக்கும் ஒரே நோக்கத்துடன் அவளை திருமணம் செய்துக் கொள்கிறான். இருப்பினும், அவர்கள் வசிக்கும் இடத்தில் ஒரு புலி வரவே அவனது திட்டங்களில் இடையூறு ஏற்படுகிறது.

ஞாயிறு, 2 மே
டால்ஹவுஸ் டைரிஸ் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), இரவு 9 மணி, ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: அமித் பார்கவ் & ஸ்ருதி ராமச்சந்திரன்
உங்களை உளவியல் ரீதியாகக் கையாண்ட ஒரு நபரை நீங்கள் பலமுறைச் சந்திக்கிறீர்கள். அத்தகைய ஒரு உண்மையான நிகழ்வின் அடிப்படையில், ஒரு ஆளுமைப் பிரச்சனைக் கொண்ட நபர் தனது துணையைக் கையாண்டு அவரது வாழ்க்கையை நரகமாக்குகிறார்.