கிள்ளான் | ஏப்ரல் 24:-

அண்மையில் எம்கே ஆசியா புரோடக்‌ஷன்ஸ் எண்டர்டெயின்மண்ட் ஏற்பாடு செய்திருந்த Miss Curvy International 2020/2021 பட்டத்தை ஜோகூர் பாருவைச் சேர்ந்த ஷாமினி மனோகரன் வென்றார். கூடுதல் அளவு உருவ அமைப்பைக் கொண்ட பெண்களுக்கான இந்தப் போட்டியில் கலந்து கொண்ட 60 பேர்களில் 24 பேர் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்கள்.

May be an image of 4 people and people standing

விவசாயத்துறையில் ஈடுபட்டுவரும் ஷாமினி மனோகரன் (37) Miss Curvy International 2020-21 பட்டத்தை வென்றுள்ள நிலையில் திருமதிக்கானப் பிரிவில் Mrs Curvy International 2020-21 பட்டத்தை சிலாங்கூரைச் சேர்ந்த ஆசிரியரான இந்திரா லீனா (42) வென்றுள்ளார்.

அதே நேரத்தில் துணைப் பட்டமான Best Evening Walk (Miss) ஷாமினி வென்றுள்ள நிலையில் Mrs Photogenic பட்டத்தை இந்திரா லீனா வென்றார்.

May be an image of 3 people, including Shamini Manoharan Pillai and people standing

வெற்றி பெற்றவர்களுக்கு ரி.ம. 3,000 ரொக்கம், மகுடம், கோப்பை, பூச்செண்டு ஆகியவற்றோடு இதர பரிசுகளும் வழங்கப்பட்டன.

மூன்றாவது ஆண்டாக நடக்கும் இந்த அழகு ராணி போட்டியில் திருமணமாகாதவர் பிரிவில் இரண்டாம் நிலையை பேரா மாநிலத்தைச் சேர்ந்த அயிடா ஃபர்ஹானா யூசோஃப் வென்றுள்ளார். திருமதிக்கானப் பிரிவில் சிலாங்கூரைச் சேர்ந்த யாஸ்மின் அப்துல்லா வென்றார்.

May be an image of Shamini Manoharan Pillai, standing and indoor

நீதிபதி குழுவினரால் தேர்தெடுக்கப்பட்ட அந்த வெற்றியாளர்கள் பல விதமான சவால்களைக் கடந்து வந்ததாக எம்கே ஆசியா புரோடக்‌ஷன்ஸ் எண்டர்டெயின்மண்ட் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி முரளி கண்ணன் தெரிவித்தார்.

கூடுதல் எடை அல்லது கூடுதல் அளவு உடல் அமைப்பு கொண்ட பெண்களின் திறமைகளையும் அவர்களில் இருக்கும் அழகையும் வெளிக்கொணரும் வகையில் இந்த போட்டி நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

May be an image of Shamini Manoharan Pillai and standing

Miss & Mrs Curvy International 2020 போட்டியில் நான் கலந்து கொள்வேன் என நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. மேலும், இறுதிச் சுற்றுக்கு முன்னதாக தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக எனது வேலை, நோய்வாய்ப்பட்ட பெற்றோர், நண்பர்கள் என அனைத்தையும் விட்டுவிட்டு கடுமையானப் ப்யிற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது என அநேகனிடம் ஷாமினி தெரிவித்தார்.

May be an image of ‎1 person and ‎text that says "‎அனைத்துலக மகளிர் நாள் #IWD2021 #ChooseToChallenge அநேகன் በ மார்ச் 8 சாங்கையும் பப்ணாதும் தலைமைத்துவத்தில் www.anegun.com பெண்கள்: கோவிட்-19 உலகத்தில் சரிசமமான எதிர்காலத்தை அடைதல் سداو Anegun.com & அநேகன் செய்திகள் @AnegunC anegun.news Anegun Studio‎"‎‎

தனக்கு ஆதரவையும் உற்சாகத்தையும் வழங்கிய தன் குடும்பத்தார், நண்பர்கள், உறவினர்கள், வந்ததாக எம்கே ஆசியா புரோடக்‌ஷன்ஸ் எண்டர்டெயின்மண்ட் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி முரளி கண்ணன், பயிற்சி அளித்தப் பயிற்சியாளர்கள், உடை வடிவமைப்பாளர்கள், ஒப்பனைக் கலைஞர்கள் என அனைவரைக்கும் தனது நன்றியினை ஷாமினி தெரிவித்துக் கொண்டார்.