சிரம்பான் | ஏப்ரல் 24:-

இப்போதைக்கு மாநிலத்தில் உள்ளப் பள்ளிகளை மூடும் அவசியம் இல்லை. மாணவர் – ஆசிரியர்களிடையே கோவிட்-19 பரவல் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என நெகிரி செம்பிலான் மாநில முதல்வர் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹாருன் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 நேர்வுகள் அளவுக்கு அதிகமாக இருந்தால் மட்டுமே பள்ளிகள் மூடப்படும் எனவும் பெற்றோர்கள் பதறமால் இருக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

குறிப்பிட்ட 2 பள்ளிகளி மட்டுமே கோவிட்-19 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பதற்றம் அடையாமல் தற்போது நடப்பில் உள்ள எஸ்.ஓ.பி.யை பின்பற்றுதல் சிறப்பு என அவர் மேலும் சொன்னார்.

தங்கள் பிள்ளைகள் கோவிட்-19 தொற்று கண்டவருடன் தொடர்பில் இருந்தாலோ அல்லது ஃஓய்வாய்ப்பட்டிருந்தாலோ பள்ளிக்கு ஆனுப்ப வேண்டாம் என பெற்றோர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சுய ஆரோக்கியம் சமூகத்தின் சுகாதாரமும் பாதுக்கப்பட வேண்டும். அதுவே நமது கடமை.

நேற்று இங்குள்ள சிரம்பான் 2 இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்தவர்களுக்கு கோவிட்-19 தொற்று கண்டதைத் தொடர்ந்து நேற்று தொடங்கி 29 ஏப்ரல் வரை 1 வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது என அநேகனும் இதர செய்தி ஊடகங்களும் தகவல் வெளியிட்டிருந்தன.

மேலும், கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட Sekolah Menengah Agama Persekutuan Labu பள்ளியைச் சேர்ந்த 179 பேர் நீலாய் அமினுடின் பாக்கி நிலையத்திலும் உயர்க்கல்வி தலைமைத்துவ பயிற்சி மையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அப்பள்ளியைச் சேர்ந்த மூவருக்குக் கோவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும் அப்பள்ளி மூடப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது.