~நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களும் அதன் விவரங்களும் மாற்றத்திற்கு உட்பட்டவை~

கோலாலம்பூர் | எப்ரல் 27:-

வெள்ளி, 30 ஏப்ரல்
மென்டே (இறுதி அத்தியாயம் -22)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: டத்தின் ஸ்ரீ ஷைலா நாயர், சி. குமரேசன், சரவணன், இர்பான் ஜய்னி, யாஸ்மின் நதியா, கமீஷா, முரளி & தேவ்யானா ஹசான்
சஞ்ஜை சினம் கொண்டு மந்திராவைத் தேடுகிறார்.

சனி, 1 மே
ஹோட்டல் பன்னீர் புஷ்பம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: சண்முகநாதன், சத்திய காந்தி, ஸ்ருதி சர்குனம், சிதம்பரம், கவிதா, முகமது டேனியல், ஷேன் சத்திஷ்வரன் & ஜெயராஜேந்திரன் ஜான்
பன்னீர் மற்றும் புஷ்பம் என்ற முதுமையான ஜோடியால் ஆவியுலகில் நடத்தப்படும் ஒரு தங்கும் விடுதி, ‘ஹோட்டல் பன்னீர் புஷ்பம்’. இஃது பண்டிகை காலங்களில் முழுமையாக இயங்கக் கூடியது. பண்டிகைக் காலம் நெருங்கும் வேளையில், ஒரு குடும்பம் அவ்விடுதி இயங்கும் வீட்டை வாங்கி குடிப்புகுவே ‘ஹோட்டல் பன்னீர் புஷ்பத்திற்கு’ அச்சுறுத்தல் ஏற்படுகிறது. தங்களது பயமுறுத்தும் விளையாட்டைத் தொடங்கி அக்குடும்பத்தை விரட்டியடிக்கப் பன்னீர் மற்றும் புஷ்பத்திற்கு மிகவும் குறைவான நேரங்களே உள்ளன. அவர்களின் முயற்சிகள் வெற்றியடையும் வேளையில், அக்குடும்பம் காணாமல் போன தங்களது சந்ததியினர் என்பதை பன்னீர் மற்றும் புஷ்பம் உணர்கிறார்கள். பூமியை விட்டு வெளியேறக் குடும்பத்துடன் பிணைப்பில் ஈடுபடுதல் அல்லது அவர்களின் வெற்றிக்கரமான ஹோட்டலைக் காப்பாற்றுதல் என இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிர்பந்தமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

டி டானா டான் (De Dana Dan) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116),  இரவு 11 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: அக்‌ஷய் குமார், சுனில் ஷெட்டி & கத்ரீனா கைஃப்
இரண்டு ஆண்கள் ஒரு பணக்கார தொழிலதிபரின் நாயைக் கடத்தி அவரிடமிருந்து அதிகமானப் பணத்தைப் பறிக்க முயற்சிக்கிறார்கள். நாய் காணாமல் போகும்போது விஷயங்கள் சலனமடைகின்றன.

திங்கள், 3 மே
சுல்தான் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
Astro First (Ch 480)
நடிகர்கள்: கார்த்தி & ரஷ்மிகா மந்தனா
குண்டர்களால் வளர்க்கப்பட்ட ஒருவன் அவர்களைச் சீர்திருத்த முயற்சிக்கிறான். ஒரு கிராமத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வேலை அவனுக்கு கிடைக்கையில் அஃது அவனுக்குச் சரியான வாய்ப்பை அளிக்கிறது.

செவ்வாய், 4 மே
பொம்மி பி.ஏ.பி.எல் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கலர்ஸ் தமிழ் எச்டி (அலைவரிசை 222),  இரவு 7 மணி, திங்கள்-சனி  | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

லண்டனைச் சேர்ந்த ஒரு இளம் வழக்கறிஞர், ‘சதி’ என்ற வழக்கத்திலிருந்து எட்டு வயது சிறுமியைக் காப்பாற்றவும் அவளது வாழ்க்கையையும் கண்ணியத்தையும் பாதுகாக்கவும் அவளை திருமணம் செய்துக் கொள்கிறார். அவர்களின் திருமணம் ஒரு வெற்றிகரமான உறவாக மாறுமா? மேலும், அவர் தனது நாட்டுப் பெண்களுக்குச் சுதந்திரம் பெற்றுத் தருவதில் வெற்றிப் பெறுவாரா?

Pin by M.Dilawer Khan on Movie posters in 2021 | Bollywood movie, Film,  Movie posters

வியாழன், 6 மே
தர்பான் (Darbaan) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: ஷரீப் ஹஷ்மி, ஷரத் கெல்கர், ரசிகா துகல் & ஃப்ளோரா சைனி
1891-இல், ரபிந்திரநாத் தாகூரின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டக் கதை. கவனக்குறைவின் விளைவாக வாழ்கையில் பல தொந்தரவுகளைச் சந்திக்கும் ஒரு பராமரிப்பாளரைப் பற்றினக் கதை.

Kamali from Nadukkaveri review. Kamali from Nadukkaveri Tamil movie review,  story, rating - IndiaGlitz.com

வெள்ளி, 7 ஏப்ரல்
கமலி From நடுக்காவேரி (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்: ஆனந்தி
பெண்களுக்கானக் கல்வியின் முக்கியத்துவத்தை இத்திரைப்படம் சித்தறிக்கின்றது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), இரவு 7.30 மணி, திங்கள்-வெள்ளி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

காதல் மற்றும் துன்பம் ஆகியவற்றை வாழ்க்கையில் அனுபவிக்கும் நான்கு இளைஞர்களின் கதையை இக்காதல் தொடர் சித்தரிக்கிறது. அன்பின் இனிமையை அவர்கள் அனுபவிக்கையில், மகிழ்ச்சி மற்றும் கசப்பான விஷயங்களையும் அவர்கள் எதிர்கொள்வர்.