கோம்பாக் | ஏப்ரல் 30:-
தடுப்புக் காவலில் தாக்கப்பட்டதன் விளைவாக கணபதி மருத்துவமனையில் இறந்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை என கோம்பாக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் அரிஃபாய் தாராவே கூறியுள்ளார்.
“காவல்துறையினரால் தாம் தாக்கப்பட்டதாக பிப்பரவரி 25, மார்ச் 2, மார்ச் 6 ஆகிய மூன்று நாட்களில் மஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற போதும் ஒரு முறை கூட அவர் சொன்னதில்லை”
மேலும் பிப்பரவரி 28, மார்ச் 3, மார் 6, மார் 7 ஆகிய நாட்களில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சென்றிருந்த போதும், எவ்விதப் புகாரையும் மருத்திவ அதிகாரிகளிடம் கணபதி கூறவில்லை என இன்று கோம்பாக் மாவட்டக் காவல் நிலையத்தில் செய்தியாளட்களைச் சந்தித்த அரிஃபாய் தாராவே கூறினார்.
அடுத்தக்கட்ட விசாரணை நடந்து வருவதாகவும் இது குறித்த குற்றப்பத்திரிக்கையை மிக விரைவில் அரசு தரப்பு வழக்கறிஞரின் அலுவலகத்துக்கு தாம் அனுப்ப இருப்பதாக அரிஃபாய் தாராவே மேலும் குறிப்பிட்டார்.
“ஏதேனும் புதிய தகவல் இருந்தால் அறிவிக்கப்படும்”
வழக்கு விசாரணைக் கட்டத்திலேயே இன்னும் இருப்பதால் பொது மக்கள் வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என அரிஃபாய் தாராவே கேட்டுக் கொண்டார்.
மேலும், கணபதி இறப்பு குறித்து பொய்த்தகவல் கொண்ட காணொலிகளை உருவாக்கும் தரப்பினரை காவல்துறை அழைத்து விசாரணை செய்யும் எனவும் அரிஃபாய் தாராவே கூறினார்.

