சென்னை | மே 2:-

தமிழகத்தில் 1996-க்கு பின் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியமைக்க உள்ளது. தற்போதைய நிலவரப்படி திமுக வ்56 தொகுதிகளில் பெரும்பாண்மை கொண்டு ஆட்சி அமைக்க உள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்கிய நிலையில் அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.

இது குறித்தும் ஸ்டாலினின் வெற்றி குறித்தும் அவர் செய்தி ஊடகங்களுடன் பேசுகையில், அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழ்நாடு சுடுகாடு எனக் கூறியுள்ளார்.

“கால் கடுக்க நடந்தோம், கத்தி கத்தி செத்தோம். அதற்கே மக்கள் எங்களுக்குக் கூடுதலான வாக்குகல் தந்திருக்க வேண்டும். ஆனால், தரவில்லை. அதனால், வருத்தம் ஒன்றும் இல்லை.

பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் வீதி வீதியாக சொன்னோம், மேடை போட்டு கருத்துகளைச் சொன்னோம். அவை அனைத்தையுமே பணம் மறைத்து விடும் என்றால் மிகப் பேராபத்தான ஒரு பணநாயகமாகிப் போன ஜனநாயகத்தை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஊடகங்களுக்கு மிகபெரியப் பொறுப்பும் கடமையும் உண்டு. இது குறித்து விவாதங்களை வைத்து எதிர்வரும் தலைமுறைக்கு நல்ல அரசியலைக் கற்பிக்க வேண்டும். இல்லை என்றால் இது முதலாளிகளின் வேட்டைக் காடாக இருக்குமே அன்றி மக்கள் வாழும் நாடாக ஒரு போதும் இருக்காது.

பணம் தான் அனைத்துயும் தீர்மானிக்கும் என்றால் அங்கு மக்களுகானச் சேவை, முறையான நிர்வாகம், அர்ப்பணிப்பு, ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பு எல்லாம் கேள்விக் குறியாகி விடும். மக்களுக்கான எந்தச் சேவையும் செய்யாமல் தேர்தல் நேரத்தில் காசு மட்டும் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் எனும் சூழ்நிலை மிகப் பெரிய ஆபத்தினை நோக்கி இந்த நாடு சென்று கொண்டிருக்கிறது என்று பொருளாகிறது.

இன்று ஊழல் – கையூட்டு இதனை ஒழிப்பது பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதன் முதல் விதையே ஓட்டுக்குக் காசு கொடுப்பதும் வாங்குவதுக்ம் தான். அங்கு தான் அது தொடங்குகிறது. அதனை ஒழிக்காமல் எதையும் சரி செய்ய முடியாது. அந்தக் கடமை என்பது ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.

மாற்றம் என்பது தற்போது மக்களின் மனத்தில் இல்லை. பணத்தில் இருக்கிறது. அதிகப் பணம் கொடுத்தவன் வென்றான். இந்தக் காலத்தில் இவ்வளவு பணம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது எனச் சிந்திக்கத் தொடங்கும் புள்ளிதான் தூய அரசியலின் தொடக்கமாக இருக்கும்.

ஒரு வேலையும் செய்யாமல் ஆங்காங்கே அமர்ந்து கணக்கெடுத்து காசு கொடுப்பது மட்டுமே அவர்களது வேலையாக இருந்தது. இஃது எதை நோக்கிச் செல்கிறது ?

இவ்வளவு காலம் கட்டிகி காத்த ஜனநாயகமா இது ?

காசு கொடுத்து மதிப்புமிக்க உரிமையை விற்கிற வறுமை நிலையில் தான் என் மக்கள் இத்தனை ஆண்டு காலம் இருக்கிறார்கள். அது தவறென்று தெரிந்தும் மதிப்பு மிக்க உரிமையை அவர்கள் விற்பது என்பது அப்படிப்பட்ட வறுமையில் அவர்கள் இருக்கிறார்கள்.

இந்த நிலையை சரி செய்ய வேண்டும். அதற்கானச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். தேர்தல் ஆணையம் அதற்கான முடு அதிகாரத்தில் செயல்பட வேண்டும்.

போன முறை 89 கோடி ரூபாய் கொடுத்தார்கள், இம்முறையும் தேர்தல் ஆணையம் எப்படி இதை சகிக்கிறது ? அப்படிச் செய்யும் வேட்பாளரை இரு தவணைக்குத் தடை விதித்தால் இது மீண்டும் நடக்காது.

மக்கள் பணம் வாங்காதச் சூழலில், நம்பி வக்களித்தோமே, எங்கே சாலை ? ஏன் குடிநீர் தரவிலை எனக் கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்கும். ஆனால், இப்பொழுது கேட்க முடியாதச் சூழலாகி விட்டது. நோட்டு வாங்காமலா ஓட்டு போட்டீர்கள் என மக்கள் கேட்கப்படுவார்கள்.

அப்படித் தலைவர்கள் தொகுதிக்கு வரவே மாட்டார்கள். சேவை செய்யவே மாட்டார்கள். தேர்தல் காலத்தில் காசு கொடுத்தால் வாக்களித்து வுடுவார்ஜ்கள் எனும் சூழலாகி விட்டது. இஃது எவ்வளவு கொடுமையானக் கட்டமைப்பாக இருக்கிறது.

இதை முதலில் ஒழிக்க வேண்டும். இதை ஒழிக்க வேண்டும் என்றால் ஒரு தலைமுறையே பேருழுச்சியாகத் தயாராகி வர வேண்டும். வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டு சமூக ஊடகங்களில் பதிவிட்டால் மட்டும் போதாது.

அரசியல் என்பது இரத்தம் சிந்தாதப் போர்
போர் என்பது இரத்தம் சிந்தும் அரசியல்

நாங்கள் இரத்தம் சிந்தாதப் போரைச் செய்து கொண்டு இருக்கிறோம். ஒரு நாள் எங்கள் சிந்தனையோடு ஒத்துப்போகிற புரட்சிகரமான இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் திரளும் போது இது அடி பட்டு விடும். நாங்கள் மேலே ஏறி விடுவோம்.

எத்தனை நாளுக்கு இந்தப் பணநாயகம் சகிக்கும் ஒரு தலைமுறை ?

கேரளாவில் காசு கொடுத்தால் மக்கள் துரத்தி அடிப்பது போல் ஒங்கும் ஒரு நாள் நடக்கும். பக்கத்தில் இருக்கும் அந்த மாநிலம் சரியாக இருக்கிறாகள். சரியான அரசியலைப் புரிந்து வைத்துள்ளார்கள்.

நாம் நமது மக்களுக்கு அரசியல் என்பது ஓட்டுக்குக் காசு வாங்கக் கூடாது என்பதைக் கற்பிக்க வில்லை. அரை நூற்றாண்டாகப் பணம் வாங்கப் பழக்கிவிட்டோம்.

ஐம்பது ஆண்டுகளாக இந்தக் கட்சிகளும் ஆட்சிகளும் மக்களுக்குக் காசு கொடுத்தால் வாக்களித்து விடுவார்கள் என்ற நிலைக்குக் கொண்டு வந்ததுதான் இவர்களின் சாதனை.

ஐம்பது ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கைத் தரமானது மதிப்புமிக்க வாக்குரிமையையே விற்கும் நிலைக்கு மக்களை வைத்தது தான் இவர்களின் சாதனை.

இந்த நாட்டை முதலில் திமுக – அதிமுக கட்சிகளின் ஆட்சியில் இருந்து விடுவிக்க வேண்டியது தான் நமது கடமை. ஒவ்வொருத்தருக்குமானக் கடமை.

அதிமுக வுக்கு செல்வி ஜெயலலிதாவைத் தவிர வேறு தத்துவத்தைச் சொல்லச் சொல்லுங்கள். அவர்களின் கொள்கை என்ன ?

அண்ணல் அம்பேத்கர் சொல்வது போல், மதிப்புமிக்க நமது உரிமைகளை சொல ரொட்டித் துண்டுகளுக்காக விற்பது அவமானம் அல்லவா இது ?

மானத்திற்காக உயிரை விட்ட ஓர் இனத்தை மானத்தையே விற்கின்ற நிலையில் கொண்டு வந்தி விட்டது என்ன சாதனை ?

அறத்தி வழி நின்று வாழ்ந்த ஓர் இந்த்தை அறத்தைக் கொலை செய்து ஆண்டது தான் அவர்களின் ஆட்சி.

இவ்வாறு மிகக் காரசாரமாக ஊடகவியலாளர்களின் முன்னிநிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.