கோலாலம்பூர் | மே 4:-

இவ்வாண்டு முதல் நான்கு மாதங்களீல் 902 இல்லற வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு முக்கியக் காரணமாக வருமானம் இழந்து பொருளாதார அழுத்தம் ஏற்பட்டதாலேயே அதிகப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளதால பெண்கள், குடும்ப, சமூக நல மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரீனா முகம்மட் கூறியுள்ளார்.

அரச மலேசியக் காவல் துறையின் புள்ளி விவரப்படி, கடந்த ஆண்டு சனவரி முதல் திசம்பர் மாதம் வரையில் இல்லற வன்முறை தொடர்பான 5,260 குற்றப்பத்திரிகைகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதே காலக்கட்டத்தில், வ்வமைச்சின் Talian Kasih இவ்விவகாரம் குறித்து 2,540 அழைப்புகள் பெற்றிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பலர் வருமானமோ அல்லது வேலையோ இழந்திருகக்கூடும். இதனால், வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். மேலும், வெளியில் செல்ல முடியாதக் கட்டுப்பாடுகளும் இருக்கின்ற நிலையில் குடும்ப உறவுகள் மீது தங்களின் உணர்ச்சியினை (கோபம்) காட்ட நேரிடும்.

பல தரப்பினரின் ஒத்துழைப்பும் புதிய அணுகுமுறைகளும் மிக அவசியமாகின்றன என்பதனை மேற்குறிப்பிட்ட புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. எனவே, தமது அமைச்சும் இதர தரப்பினரும் கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய இலாகாவுடன் இணைந்து பள்ளிவாசல்களை இல்லற வன்முறை பாதுகப்பு மையங்களாகச் செயல்படத் திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் கூறினார்.

முதற்கட்டமாக கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச பள்ளிவாசலும் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் அல் குஃப்ரான் பள்ளிவாசலும் இத்திட்டத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சமய – இன வேறு பாடு பார்க்காமல் இல்லற வன்முறையால் பாதிக்கப்பட்டப் பெண்கள் இங்கு பாதுகாப்பு / அடைக்கலம் நாடலாம்.

பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு அப்பள்ளிவாசலில் ஏற்கெனவே உள்ள தங்குமிட (அறை) வசதி, அடிப்படைத் தேவைகள், உணவு ஆகியன அங்கு அடைக்கலம் நாடியிருக்கும் காலக்கட்டத்தில் வழங்கப்படும்.

கூட்டரசுப் பிரதேச இஸ்லாமிய சமய இலாகாவின் 19 அதிகாரிகள் இதெற்கெனவே சிறப்புப் பயிற்சி பெற்று இங்கு பணியாமர்த்தப்படுவர்.

அவ்விலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ முகம்மட் அஜிப் இஸ்மாயில் இது குறித்துத் தெரிவிக்கையில், மேலும் 12 பள்ளிவாசல்கள் புகார் மையங்களாகவும் ஆலோசனை நிலையங்களாகவும் செயல்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.