சென்னை | மே 6:-

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார். அவருக்கு வயது 74.

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு. ‘சின்னத் தம்பி’, ‘திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’ ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கோவிட்-19 பாதிப்பின் காரணமாக பாண்டுவும் அவரது மனைவி குமுதாவும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்தச் சூழலில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்று பாண்டுவின் உயிர் பிரிந்தது. அவரது மனைவி தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவரகளின் கண்காணிப்பில் உள்ளார்.

பாண்டு – குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு, பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகளை வடிவமைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கே.வி.ஆனந்த் கோவிட்-19 தொற்றால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் தற்போது நடிகர் பாண்டுவும் உயிரிழந்திருப்பது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.