அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > சாலைத் தடுப்பை மோதி டாக்டர் நகுலேசன் மரணம்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சாலைத் தடுப்பை மோதி டாக்டர் நகுலேசன் மரணம்!

பெட்டாலிங் ஜெயா, செப். 11-
காரை ஓட்டிக்கொண்டிருக்கும் பொழுது நெஞ்சு வலி ஏற்பட்டதாக நம்பப்படும் இந்திய டாக்டர் நகுலேசன் முத்தையா (வயது 47) ஓட்டிய கார் சாலை தடுப்பை மோதி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே பலியானார்.

இந்த துயர சம்பவம் நேற்று மாலையில் புக்கிட் லஞ்சாங்கை நோக்கி செல்லும் கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலையின் (என்.கே.வி.யி) 23.8 கிலோமீட்டரில் நிகழ்ந்தது. அந்த மருத்துவர் வீட்டிற்கு செல்லும் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்ததாக சுங்கை பூலோ மருத்துவமனையின் அதிகாரிகள் உறுதி படுத்தினர்.

கடந்த 7ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய நகுலேசன், தனது பிஎம்டபள்யூ ரக காரில் சென்றுக்கொண்டிருக்கும் போது இச்சம்பவம் நிகழ்ந்ததாக சிலாங்கூர் சாலைப் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவுத் துணைத் தலைவர் டிஎஸ்பி சாஹிமி ஹுசேன் தெரிவித்தார். இது தொடர்பில் கோலாலம்பூரில் உள்ள நகுலேசனின் வேலை செய்யும் இடத்தின் பணியாளர் ஒருவரை விசாரித்த போது தமக்கு உடல் நிலை சரியில்லாதாதால் கோத்தா டாமான்சாராவிலுள்ள தமது வீட்டிற்கு சீக்கிரம் செல்வதாக அவர் கூறினார்.

இச்சம்பவத்தில் நகுலேசன் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமுற்ற வேளையில், இதர வாகனங்கள் ஏதும் பாதிப்படையவில்லை என்று பத்திரிகையாளர்களிடம் சாஹிமி ஹுசேன் குறிப்பிட்டார். இதனிடையே, காரில் சிக்கிக் கொண்ட நகுலேசனை தீயணைப்பு மீட்புப் படையினர் வெளியேற்றினர்.

இவரது உடல் சவப் பரிசோதனைக்காக மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவத்தினால் அந்த நெடுஞ்சாலையில் பெரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன