பெண்கள் என்றாலே.. எதுவும் தெரியாது! எதையும் அறிந்திருக்க மாட்டார்கள்! அடுப்படி தான் அவர்களின் உலகம் என்று யோசித்தவர்களின் சிந்தனையை மாற்றிய பெண்கள் உலக வரலாற்றில் தனித்து நிற்கிறார்கள். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் பெண்களுக்குள் வேரூன்றி விட்டால் அதைச் சாதித்தே ஆக வேண்டும் என்பதற்காக இறுதி வரை போராடுவார்கள்.

அந்த வரிசையில் பரதக் கலைககாகத் தன்னை அர்ப்பணித்த ஆசிரியர் நளினி 35 பெண் மாணவிகளைக் கொண்டு 35 மணி நேரம் இடைவிடாத பரதம் ஆடி ஆசிய சாதனை புத்தகத்திலும் மலேசிய சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறார்.

சாதனை படைத்த மகிழ்ச்சியில் ஶ்ரீராதாகிருஷ்ணன் இசை கலைக்கூடத்தின் மாணவிகள்…

பெண்கள் மனதில் இளம் வயதிலேயே சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியை ஏற்படுத்த வேண்டும் என்று ஆசிரியர் நளினி நினைத்ததன் விளைவாகவே இந்தச் சாதனை அரங்கேறுகின்றது.

”பெண்களால் முடியும் இளம்வயதில் அவர்களுக்குள் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் துளிர்விட வேண்டும் அந்த எண்ணம் வந்தால் நிச்சயம் சாதிப்பார்கள என்கின்றார்” ஆசிரியர் நளினி.

மலேசிய சாதனைப் புத்தகத்தில் ஸ்ரீ ராதாகருஷ்ணன் இசை கலைக்கூடத்தைச் சார்ந்த 35 மாணவிகள் நீண்ட நேர இடைவேளை யற்ற பாரம்பரிய நடனம், அதிகப் பெண்கள் எண்ணிக்கையைக் கொண்ட 24 மணி நேர இடைவிடாத பரதம் ஆடி ஆசிய / மலேசிய சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்து இருக்கின்றார்கள்.

முதலில் தயக்கமாக இருந்தாலும் மாணவர்கள் வழங்கிய முழுமையான ஒத்துழைப்பின் அடிப்படையில் இது சாத்தியமானது என்கிறார் ஆசிரியர்களின் நளினி.

தமது பிறந்த நாளில் சாதனைப் படைத்த ஆசிரியை நளினி

”இது முடியுமா? என்ற எண்ணம் முதலில் தோன்றியது. ஆனால் எனது மாணவிகள் முடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் விதைத்தார்கள். அனைவரும் இணைந்து 35 மணி நேரம் இடைவிடாமல் நடனமாடி இந்தச் சாதனையைப் புரிந்திருப்பது அடுத்தச் சாதனையை நோக்கிய எங்களின் பயணத்திற்கு அடித்தளாக அமைந்துள்ளது.

அனைத்திலும் பெண்கள் சாதனை படைக்க முடியும். அந்தச் சாதனையின் வழி உலக அரங்கில் தங்களுகென்று தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்ற சிந்தனையை விதைத்துத் தம்மை இதில் முழுமூச்சில் ஈடுபட ஆசிரியர் நளினி பயிற்சி அளித்ததாக 10 ஆண்டுகளாக அவருடன் இருக்கும் மாணவி நமீதா சேகர் தெரிவித்தார்.

இந்த வெற்றிக்குக் காரணம் அவர்தான் அவர் இல்லையென்றால் இது சாத்தியமே அடைந்திருக்காது எங்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை எங்களுக்குள் விதைத்தார். நமீதா போலவே மற்றொரு மாணவியும் இந்தச் சாதனை குறித்துப் பேசினார்

”நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு நடப்பில் இருந்த காலகட்டத்தில் கூட இணையம் வாயிலாக நாங்கள் இணைந்து, இந்தச் சாதனையை எவ்வாறு சாத்தியப்படுத்த முடியும் என்பது குறித்து விவாதித்தோம். நடனம் ஆடினோம் முழுமையாக இதில் எங்கள் இணைத்துக் கொண்டோம். அதுவே இந்த வெற்றிக்குக் காரணம். நாங்கள் தனி ஆள் அல்ல ஆசிரியர் நளினியின் பிரதிநிதி என்றார் மகாலெட்சுமி சுகுமாறன்.

இவர்களின் 35 மணிநேர இடைவிடாத நடனம் மலேசிய ஆசிய / மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தது என்ற செய்தி அறிவிக்கப்பட்டபோது, அனைத்து மாணவிகளும் கண் கலங்கினார்கள். அவர்களை ஆசிரியர் நளினி அரவணைத்துக் கொண்டார்.

பெண்களின் சாதனைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வரும் வேளையில் நமது பாரம்பரிய பரதக் கலையையும் ஆசிய அளவில் சாதனை பட்டியலில் நினைத்தவர்களுக்கு நமது வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்வோம்.