* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களும் அதன் விவரங்களும் மாற்றத்திற்கு உட்பட்டவை

வியாழன், 13 மே
சுல்தான் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
Astro First (Ch 480)
நடிகர்கள்: கார்த்தி & ரஷ்மிகா மந்தனா
குண்டர்களால் வளர்க்கப்பட்ட ஒருவன் அவர்களைச் சீர்திருத்த முயற்சிக்கிறான். ஒரு கிராமத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வேலை அவனுக்குக் கிடைக்கையில் அது அவனுக்குச் சரியான வாய்ப்பை அளிக்கிறது.

திங்கள், 17 மே
மன்மத புல்லட்ஸ் (புதிய அத்தியாயங்கள் 11-15)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: தேவகுரு, ஷேபி, ரவின் ராவ், பர்வின், ஹம்சினி, சாந்தினி, கவிதா, அக்ஷரா & ஹுமேஷ்
பவானியைப் பற்றிய உண்மையைக் கௌத்தம் கண்டுப்பிடித்ததால் பதற்றம் அதிகரிக்கிறது. அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தும் வகையில் ஒரு மரணம் நிகழ்கிறது.

வியாழன், 20 மே
கர்ணன் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
Astro First (அலைவரிசை 480)
நடிகர்கள்: தனுஷ், லால் பால், நடராஜா சுப்பிரமணியன் & யோகி பாபு
கர்ணன், என்ற ஒரு அச்சமற்ற இளைஞன் தனது கிராமவாசிகளின் உரிமைகளுக்காகப் போராட நேரிடுகிறது.

காகஸ் (Kaagaz) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: பங்கஜ் திரிபதி, மோனல் கஜ்ஜார் & சதீஷ் கௌசிக்
இறந்ததாக அறிவிக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதர் தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க முயற்சிக்கையில் அவர் எதிர்கொள்ளும் போராட்டங்களை இக்கதைச் சித்தறிக்கின்றது.

வெள்ளி, 21 மே
திருவாளர் பஞ்சாங்கம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்: ஆனந்த் நாக் & ஊர்வசி
ஜோதிடத்தைக் கண்மூடித்தனமாக நம்பும் ஒரு இளைஞனுக்கும் ஒரு போதைப்பொருள் வியாபாரியிக்கும் இடையில் மோதல்கள் ஏற்படவே அவனது வாழ்க்கைத் தலைகீழாக மாறுகிறது.

ஞாயிறு, 23 மே
அனல் பறக்குது (புதிய சீசன்)
ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), இரவு 8 மணி, ஞாயிறு | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
சமையல்காரர்கள்: வீரசிங்கம், ஜானகி, காஞ்சனா தேவி & கே.வி.பிரசன்னா
தொகுப்பாளர்: ராகேஷைரி நாயுடு
ஒவ்வொரு அத்தியாயத்திலும் இரண்டு முக்கியப் பிரிவுகள் (முதன்மை சமயல் & பலகாரம்) மற்றும் விரைவானச் சமையல் பிரிவு ஆகியவற்றின் சமையல் செய்முறையை உள்ளடக்கிய இந்தியப் பாரம்பரியச் சமையல் நிகழ்ச்சி. சமைப்பதற்க்குத் தேவையானப் பொருட்களின் பெயர்கள், செய்முறைகள் ஆகியவை மலேசியர்களை சார்ந்தாக இருப்பதால் அனைத்து ரசிகர்களுக்கும் ஏற்புடையதாக இந்நிகழ்ச்சி இருக்கும். எனவே, சமையல் செய்முறைகளைத் தெளிவாகப் புரிந்துக் கொண்டு ரசிகர்கள் தங்களின் அன்பானக் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நம்பிக்கையுடன் உணவு வகைகளைச் சமைக்க இந்நிகழ்ச்சி கைக்கொடுக்கும்.