திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > கலை உலகம் > சர்ச்சையான தலைப்பில் கௌதம் கார்த்திக்கின் அடுத்த படம்?
கலை உலகம்

சர்ச்சையான தலைப்பில் கௌதம் கார்த்திக்கின் அடுத்த படம்?

கௌதம் கார்த்திக் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஹரஹர மஹாதேவகி’. இதில் இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிசர் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியானது. இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது.

செப்டம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் மற்றும் கவுதம் கார்த்திக் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து பணிபுரியவுள்ளார்கள். இதற்கு ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இதில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் பிற நடிகர்கள், நடிகைகள் யார் என்பதை விரைவில் இறுதி செய்து படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன