கோலாலம்பூர் | மே 20:-

‘ஆட்டம் ரிட்டர்ன்ஸ்’-ப் பற்றினச் சில விவரங்கள்
  • திறமையான உள்ளூர் நடனக் கலைஞர்கள் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதோடு அதற்க்கான அங்கீகாரத்தைப் பெற ஒரு தளத்தை வழங்கும் வண்ணம் ஆஸ்ட்ரோ தனது புகழ்ப்பெற்ற உள்ளூர் தமிழ் நடனப் போட்டியான ஆட்டம் ரிட்டர்ன்ஸ்ஐ மீண்டும் வழங்குவதில் பெருமைக் கொள்கிறது. மே 20 முதல் 2021 ஜூன் 15 வரை நடைப்பெரும் மெய்நிகர் நேர்முகத்தேர்வில் ஆர்வமுள்ள உள்ளூர் நடன அணிகள் பங்கேற்க அழைக்கப்படுகின்றனர். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆறு உறுப்பினர்களைக் கொண்டத் தகுதியான அணிகள் ஆஸ்ட்ரோ உலகம் வாயிலாகத் தங்களின் நடனக் காணொளிகளைச் சமர்ப்பிக்கலாம்.
  • மெய்நிகர் நேர்முகத்தேர்வில் கலந்துக் கொள்ளப் போட்டியாளர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம்:
    • போட்டியாளர் விவரங்களைப் பூர்த்திச் செய்து விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
    • ஆஸ்ட்ரோ உலகம் அகப்பக்கத்தில் இடம் பெற்றுள்ள நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப குழுவின் படைப்பை சித்தரிக்கும் அசல் காணொளியைப் பதிவேற்றம் செய்யுங்கள்.
  • இந்த மெய்நிகர் நேர்முகத்தேர்விலிருந்து 25  சிறந்த அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து, இரண்டாம் நேர்முகத்தேர்விற்க்குத் தகுதிப் பெறுவர். இரண்டாம் நேர்முகத்தேர்வின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட ​அணிகள் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவின் முன்னிலையில் தங்களது படைப்புகளை வழங்குவர். பின்னர், அவ்விரண்டாம் நேர்முகத்தேர்விலிருந்து சிறந்த 14 அணிகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • பிறகு, 14 அணிகளும் போட்டியின் போது பல நீக்கங்களை உள்ளடக்கியத் தீவிர நடனச் சுற்றுகளுக்கு உட்படுத்தப்படுவர்.
  • வெற்றி வாகைச் சூடிய அணிகள் வீட்டிற்கு ரொக்கப் பரிசுகளைத் தட்டிச் செல்வர்: முதல் நிலை வெற்றியாளர் ரிம60,000; இரண்டாம் நிலை வெற்றியாளர் ரிம30,000; மற்றும் ஆறுதல் பரிசுகளை வென்ற மூன்று அணிகள் ஒவ்வொன்றும் தலா ரிம12,000  ரொக்கப் பரிசுகளை வெல்வர்.
  • மேல் விவரங்களுக்கு www.astroulagam.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.