கோலாலம்பூர் | மே 21:-

தமிழக அரசால் முதல்முறையாக புதியதாக அமைக்கப்பட்டிருக்கும் புலம்பெயர்ந்த உலகத் தமிழர்கள் நலன்களை கையாளும் அமைச்சகத்தின் மலேசிய பிரதிநிதியாக ஒரு தூய தமிழரே நியமிக்க வேண்டும் என மஇகா தேசியத் தலைவர் மாண்புமிகு தான்சிறி டத்தோசிறி ச. விக்னேசுவரன் அவர்களிடம் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் மனு ஒன்றை வழங்கி இருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்

மலேசிய இந்தியர்களில் சுமார் 80 சதவீதம் தமிழர்கள் என்பதால், புலம்பெயர்ந்த அமைச்சகத்தின் மலேசிய பிரதிநிதியாக மலேசியத் தமிழரேயே நியமிக்க, தமிழர்களை பெரும்பான்மையாககொண்ட மஇகா முன்வர வேண்டும் என அதன் தேசியத் தலைவர் மாண்புமிகு தான்சிறி அவர்களிடம் கோரிக்கை வைக்கிறோம் என்றார்

2009 தமிழீழ இனப்படுகொலைக்கு பிறகு, உலகத் தமிழர்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி, தமிழ்நாடு அரசிடம் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கடந்த 10 ஆண்டுகளாக புலம்பெயர் தமிழர் அமைச்சகத்தை உருவாக்க வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இவ்வரிய வாய்ப்பை நழுவ விடாது இக்கருத்தையே முன்னுறித்தியும் வலியுறுத்தியும் தங்களைப் போன்று ஒற்றைச் சிந்தனையில், நாட்டிலுள்ள தமிழர் அமைப்புகளும் கோரிக்கை முன்வைக்க வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கேட்டுக் கொள்வதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்