கோலாலம்பூர் | மே 24:-

கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினரைத் தொடர்புப் படுத்திய கற்பழிப்புக் குற்றச்சாட்டு குறித்த விசாரணை காவல்துறை முடிக்கும் தறுவாயில் இருப்பதாக கோலாலம்பூர் காவல்துறை தலைவர் அஸ்மி அபு கசும் கூறினார்.

இக்குற்றாட்டு குறித்து புகார் அளித்த – பாதிக்கப்பட்ட 33 வயது பெண்மணியின் புகாரின்படி, குற்றஞ்சாட்டப்பட்ட இரு ஆடவர் கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹில்மான் இதாமுக்குத் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மிக விரைவில் தேசிய வழக்கறிஞர் இலாகாவுக்கு குற்றப்பத்திகை அனுப்படும்.

இக்குற்றச்சாட்டு குறித்து புதிதாக யாரையும் கைது செய்யவில்லை. கடந்த திசம்பர் மாதம் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டு காவல்துறை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

 கடந்த திசமபர் 5ஆம் நாள் தாம் கற்பழிக்கப்பட்டதாக புகாரளித்த அந்தப் பெண்மணி, மிரட்டலுக்குப் பின்னர் திசம்பர் 8ஆம் நாள் அப்ப்புகாரை மீட்டுக் கொண்டார்.

இருப்பினும், தனது முடிவை மாற்றிக் கொண்ட அப்பெண்மணி மீண்டும் இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கடந்த சனவரி தெரிவித்துள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவரில் ஒருவர் நடப்பு அரசாங்கமான தேசியக் கூட்டணி உறுப்புக் கட்சியின் முக்கியத் தலைவர் எனவும் மற்றொருவர் கோம்பாக் செத்துயா சட்டமன்ற உறுப்பினர் ஹில்மஐன் நண்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் காவல்துறை புகாரில், கடந்த ஆண்டு திசம்பர் 5 ஆம் நாள் ஒரு தங்கும் விடுதியில் அதிகாலை 4.00 மணி அளவில் மயக்க நிலையில் இருந்து எழுந்த அப்பெண்மணி நிர்வாணக் கோலத்தில் தனியே இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வறையின் குளியல் அறையில் ஆணுறையைக் கண்டதும் தாம் கற்பழிக்கப்பட்டதாக அப்பெண்மணி உணர்ந்திருக்கிறார்.

இது குறித்து கடந்த மே 8ஆம் நாள் மீண்டும் இரண்டாவது காவல்துறை புகாரை அப்பெண்மணி அளித்துள்ளார். அதில், ஶ்ரீ ஹர்த்தாமாஸில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தனது பிறந்த நாள் கொண்டாட்ட விருந்துக்குப் பிறகு இந்தக் கற்பழிப்பை ஹில்மான் திட்டமிட்டதாகக் குறிப்பிட்டார்.

இம்மாதம் சமூக ஊடகத்தில் பரவியக் சிசிடிவி காணொலியில், அந்தத் தங்கும் விடுதி அறைக்குக் கொண்டு செல்லப்பட்டப் பெண் தாம் தான் என அப்பெண்மணி உறுதிப்படுத்தினார். அவரை அந்த அறைக்குக் கொண்டு வந்தது ஹில்மான் எனக் குற்றம் சாட்டினார்.