கோலாலம்பூர் | மே 26:-

அண்மையில் எல்ஆர்டி விபத்து குறித்து செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட Prasarana Malaysia Berhad குழுமத்தின் தலைவர் தஜுடின் அப்துல் ரகுமான் முகக்கவரி அணியாத விவகாரம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து பேசிய டாங் வாங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகம்மட் ஸைனால் அப்துல்லா, தொற்று நோய்க் கட்டுப்பாடு – தடுப்புச் சட்டம் 1988 (சட்டம் 324) பிரிவு 21Aஇன் படியும், 2021ஆம் ஆண்டு தொற்று நோய்க் கட்டுப்பாடு – தடுப்பு விதிமுறைகள் 17(1)இன் படியும் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

இவ்விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் விசாரணைக்காக டாங் வாங்கி மாவட்டக் காவல் நிலையத்திகு அழைக்கப்படுவர்.

விசாரணை முடிந்ததும் அரசு தரப்பு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு இது குறித்த அறிக்கை அனுப்பப்படும்.

எனவே, தேசியப் பாதுகாப்பு மன்ற வெளியிட்டுள்ள அனைத்து விதிமுறைகளையும் பொது மக்கள் பின்பற்றா வேண்டும் என காவல்துறை தரப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

அதனை மீறுவோருக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

அணியப்பட்ட முகப் பாதுகாப்புக் கவசம் சாதாரணமானதல்ல, சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டது.

நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில், தஜுடின் வாய்,  ஊக்குப் பகுதியை முழுமையாக மறைக்கும் FACEMASK முகக்கவரி அணியாமல் ஒளி ஊடுறுவக் கூடியத் தன்மைக் கொண்ட FACE SHIELD முகப் பாதுகாப்புக் கவசத்தை மட்டும் அணிந்திருந்தார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் எஸ்.ஓ.பி. படி, FACEMASK முகக்கவரி அணியாதது ஒரு குற்றமாகும்.

இதனிடயே, செய்தியாளர்களிடம் தாம் பேசவும் விளக்கமளிப்பதற்காகவும் தான் FACE SHIELD முகப் பாதுகாப்புக் கவசத்தை மட்டும் அணிந்திருந்ததாக தஜுடின் கூறினார்.

FACE SHIELD முகப் பாதுகாப்புக் கவசத்தை மட்டும் அணிந்திருந்தது போதாது என்றால் நான் மன்னிப்பு கேட்கிறேன்.

மேலும், நான் பயன்படுத்திய இந்த FACE SHIELD முகப் பாதுகாப்புக் கவசம் நம்பிக்கைக்குரிய தரப்பிடம் இருந்து மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு தருவிக்கப்பட்டது.

ஆனால், செய்தியாளர் சந்திப்பில் வாய்,  ஊக்குப் பகுதியை முழுமையாக மறைக்கும் FACEMASK முகக்கவரியை அணிந்து எவ்வாறு பேசுவது ? எனவே, அந்த FACE SHIELD முகப் பாதுகாப்புக் கவசம் போதுமானது எனத் தாம் எண்ணியதாக தஜுடின் குறிப்பிட்டார்.