⦁ பிரபல தொடர், ராமராஜன் ​​சீசன் 2
⦁ புதிய இசை நாடகத் தொடர், சுவர லயம்

‘ராமராஜன்’ எனும் பிரபலக் குடும்ப நகைச்சுவைத் தொடரின் இரண்டாவது சீசன் மற்றும் ​​‘சுவர லயம்’ எனும் புதிய இசை நாடகத் தொடர் உள்ளிட்ட மேலும் இரு உள்ளூர் தமிழ் தொடர்களின் முதல் ஒளிபரப்பை ஜூன் 1 முதல் ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். அவ்விருத் தொடர்களும் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் கிடைக்கப் பெரும்.

முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து, அதிக களிப்புடனும் இதயத்தைத் தூண்டும் தருணங்களுடனும் மீண்டும் வந்துவிட்டது ‘ராமராஜன் 2.0’. இம்முறை ‘ஃபாக்ஸி’ அதே ‘ராமராஜன்’ கதாபாத்திரத்தில் நடிக்க, அதற்கு ஜோடியாகத் ‘தெடி’ எனும் மற்றொரு நான்கு கால் நண்பர் அறிமுகப்படுத்தப்படுகிறது.

திறமையான உள்ளூர் திரைப்பட இயக்குநர் கபிலன் பூலோந்திரன் கைவண்ணத்தில் மலர்ந்த இத்தொடரில் உள்ளூர் திறமைசாலிகளான டத்தோ ஸ்ரீ டத்தின் கீதாஞ்சலி, தோக்கோ சத்தியா, தாஷா கிருஷ்ண குமார், விக்ரன் இளங்கோவன், குபேன் மகாதேவன், அக்ஷ்ரா நாயர், சாந்தினி சந்திர போஸ், பென் ஜி, சஹா சேம்ப், ராகேஷ் எனும் ராக்கெட் மற்றும் அல்வின் மார்த்தின் சத்தியாவூ ஆகியோர் நடித்துச் சிறப்பித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, ரசிகர்கள் மின்னியல் தளமான ஆஸ்ட்ரோ உலகம் வழியாக ‘ராமராஜன் 2.0 – வாட்ச் அண்ட் வின்’ போட்டியில் பங்கேற்று, iPhone XR மற்றும் இரண்டு VIVO Y2 விவேகத் தொலைப்பேசிகளைப் பரிசாக வெல்லும் ஓர் அறிய வாய்ப்பை பெறலாம். ‘ராமராஜன் 2.0’, ஜூன் 1 முதல் இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 202) முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

உள்ளூர் திறமைசாலியான எஸ்.பாலசந்திரன் இயக்கிய ‘சுவர லயம்’ என்ற முதல் ஒளிபரப்புக் காணும் இசை நாடகத் தொடரை வாடிக்கையாளர்கள் கண்டு இரசிக்கலாம். இத்தொடரில் கர்ணன் கணபதி, யாஸ்மின் நடியா, ஜெயஸ்ரீ விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். அருமையானக் கதைக்களம் கொண்ட இத்தொடர், நவீன மற்றும் பாரம்பரிய இசை அம்சங்களைக் கொண்ட ஏழு அசல் பாடல்களை இரசிகர்களுக்கு வழங்குகிறது.

உள்ளூர் மற்றும் சர்வதேசத் திறமைசாலிகள் இவ்வேழு பாடல்களுக்கும் இசையமைத்து பாடியுள்ளனர். ஷேன் எக்ஸ்ட்ரீம், பி. சத்திய நாராயணன், பவானி மற்றும் எட்வின் லூயிஸ் ஆகியோர் இசையமைப்பாளர்கள் வரிசையில் அடங்குவர். குமரேஷ் கமலக்கண்ணன், சங்கரி கிரிஷ், டேனேஷ் செல்வநாதன், பிரைம் சம்பா, பவானி மற்றும் எட்வின் லூயிஸ் ஆகியோர் பாடகர்கள் வரிசையில் அடங்குவர். ‘சுவர லயம்’, ஜூன் 1 முதல் இரவு 8 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் எச்டியில் (அலைவரிசை 201) முதல் ஒளிபரப்புக் காணுகிறது.

(நிகழ்ச்சிகளின் முழுமையான TX விவரங்களுக்குப் பின் இணைப்பை அணுகவும்)
மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.