கோலாலம்பூர். ஜூன் 1-

கோவிட் 19விற்காக அமைச்சர்கள் துணையமைச்சர்களின் 3 மாத ஊதியத்தை வழங்குவார்கள் எனப் பிரதமர் தான்ஶ்ரீ முகிடீன் யாசின் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.

இருப்பினும் அதில அமைச்சர்கள் துணையமைச்சர்களின் கூடுதல் சலுகைகளும் மானியமும் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற கேள்வியை அம்னோ துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“இது அவர்களின் ஊதியமாக மட்டும் இருக்கக்கூடாது, இது அவர்களின் பல்வேறு சலுகைகளில் பொழுதுபோக்கு மானியத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும், அவை அவர்கள் பெரும் ஊதியத்தை விட அதிகமானது என அவர் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே மக்களுக்காகப் பிரதமர் அறிவித்துள்ள சலுகைகளை அவர் வரவேற்றுள்ளார்.