புத்ராஜெயா, ஜூன் 1-

இன்று 7,105 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சிலாங்கூர் மீண்டும் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.

சிலாங்கூர் இன்று 2,068 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது தொடர்ச்சியாக 10 வது நாளாக 2000க்கும் அதிகமான நேர்வுகள் சிலாங்கூரில் பதிவாகியுள்ளன.

கோலாலம்பூரில் 817 புதிய வழக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.இது மே 28 முதல் 800க்கும் அதிகமான நேர்வுகள் பதிவாகியுள்ளதையும் சுகாதார அமைச்சு சுட்டிக் காட்டியுள்ளது.

 • சிலாங்கூர் (2068)
 • கோலாலம்பூர் (817)
 • சரவாக் (703)
 • கிளந்தான் (531)
 • ஜோகூர் (431)
 • பினாங்கு (400)
 • நெகிரி செம்பிலான் (397)
 • பேரா (387)
 • சபா (318)
 • மலாக்கா (249)
 • கெடா (236)
 • திரங்கானு (198)
 • பகாங் (190)
 • லாபுவான் (162)
 • புத்ராஜெயா (18)
 • பெர்லீஸ் (0)