மார்ட்டின் ஆர். சந்திரன், இயக்குநர்

மன்மத புல்லட்ஸ் தொடரைப் பற்றியும் இத்தொடரை இயக்குவதற்க்கான உங்களின் உத்வேகம் பற்றியும் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

வளர்ந்து வருகையில் ஆங்கில மொழியிலான நிலைமைச் சார்ந்த நகைச்சுவைகளையும் (சிட்காம்), அவைக் கொண்டிருந்த “நல்ல உணர்வு” சாரத்தையும் நேசித்தேன். நான் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் கடினமானச் சூழலையோ காலக்கட்டத்தையோ எதிர்நோக்கும்போது அந்த நிலைமைச் சார்ந்த நகைச்சுவைகளைக் கண்டுக் களிப்பேன்.

அவை, என்னை உற்சாகப்படுத்தத் தவறியதில்லை. எனவே, இதனை மனதில் கொண்டு, மலேசிய இரசிகர்களுக்கு அதே “நல்ல உணர்வை” கொண்ட மற்றும் கடினமானச் சூழலின்போது அவர்களை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த நிகழ்ச்சியை உருவாக்க விரும்பினேன்.

வயது வரம்பின்றி இரசிகர்கள் மன்மத புல்லட்ஸ் தொடரை எத்தனை முறைப் பார்த்து இரசித்தாலும் அதே “நல்ல உணர்வை” வழங்கும் என்று நம்புகிறேன்.

இத்தொடரை இயக்கிய உங்களின் சில அனுபவங்கள் யாவை (உதாரணத்திற்கு முதல் முறையாக ஒரு தொடரை இயக்குதல் மற்றும் பல)?

ஒரு இயக்குநராக இது எனது முதல் தொடர் என்பதால், எனது இலக்குகளையும் எதிர்பார்ப்புகளையும் அடைய நான் பல அற்புதமான மற்றும் திறமையான நபர்களின் மீது நம்பிக்கை வைக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு துறையையும் செவ்வனே கையாண்டு, நிகழ்ச்சியின் அனைத்து அம்சங்களும் சரியாக இருப்பதை உறுதி செய்ததே நான் சந்தித்த முக்கியச் சவாலாகும்.

மார்ட்டின் ஆர். சந்திரன், இயக்குநர்

திரைக்கதை (ஸ்கிரிப்ட்) மேற்பார்வையாளராகவும் பணியாற்றிய எனது கலை இயக்குநரின் மகத்தான முயற்சிகள் உட்படச் சிறப்பானக் குழுவினர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமடைந்திருக்காது. இந்த நிகழ்ச்சியைப் பற்றியப் பாராட்டுகள் அனைத்தும் திரைக்குப் பின்னால் பணியாற்றியவர்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும். உண்மையிலேயே இந்த அற்புதமானத் திட்டத்தின் தூண்கள் அவர்கள்தான்.

இந்தத் தொடரில் இரசிகர்கள் எதை எதிர்பார்க்கலாம்?

இத்தொடரின் மிகவும் தனித்துவமான அம்சம், அது கொண்டிருக்கும் மூன்று வெவ்வேறு முடிவுகளாகும். எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்களாக, மிட்செல் ஆர். சந்திரனும் நானும் ஒரு நம்பமுடியாத முடிவை உருவாக்க விரும்பினோம். ஒளிபரப்பப்படும் வரை எங்களுக்கு கூட அதன் முடிவுத் தெரியாது.

மூன்று ஜோடிகளில் சாராவின் பெற்றோராகத் தங்களுக்கு விருப்பமான ஜோடிக்கு இரசிகர்கள் வாக்களிக்க அனுமதிக்கும் வண்ணம் நாங்கள் மூன்று வெவ்வேறு முடிவுகளை ஒளிப்பதிவு செய்தோம். 21 அத்தியாயங்களிலும் பல தடயங்கள் இணைக்கப்பட்டிருந்ததால், மூன்று முடிவுகளில் கதைக்குப் சிறப்பாக பொருத்தும் ஒரு முடிவை எழுத்தாளர்களாக நாங்கள் எங்களின் சிந்தனையில் கொண்டிருந்தோம்.

எனவே, இரசிகர்கள் நாங்கள் விரும்பிய முடிவைத் தேர்வுசெய்கிறார்களா என்பதைப் பார்ப்பது உண்மையிலேயே ஒரு சுவாரஸ்யமானக் கண்ணோட்டமாக இருக்கும் என்று நாங்கள் தனிப்பட்ட முறையில் நினைத்தோம்.

தேவகுரு, நடிகர்:

மன்மத புல்லட்ஸ் தொடரில் நீங்கள் வகித்தக் கதாப்பாத்திரத்தைப் பற்றி எங்களிடம் கூறுங்கள்?

ஓர் உயர் தொழில்நுட்ப மன்மதனாக (cupid) இத்தொடரில் நான் வலம் வந்தேன். அவர் ஒரு நம்பிக்கையான மற்றும் உறுதியான நபர். கவர்ச்சியான ஆளுமையைக் கொண்ட அவர் தனது கடமைகள் அனைத்தையும் தோல்வியின்றி செய்வார். இந்த பாத்திரம் பல்வேறு உணர்ச்சிகளை உள்வாங்கி அவற்றைச் சித்தரிக்க எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது.

தேவகுரு, நடிகர்:

இந்தத் தொடருக்கான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை.

எதிர்காலத்தில் வரவிருக்கும் தொடர்களுக்கு இத்தொடர் ஒரு முன்னுதாரணமாக அமைய வேண்டும். நாங்கள் சர்வதேசத் தொடருக்கான வார்ப்புருக்களைப் பயன்படுத்தி அதை நன்றாகச் செயல்படுத்தியுள்ளோம்.

இதன் விளைவாக இத்தொடர் இரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் தொடரை விரைவில் சர்வதேசச் சந்தையில் காண நான் விரும்புகிறேன். மலேசியாவில் விரைவில் உயர் தரமானத் தொடர்களை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.