செந்துல் | ஜூன் 4 :-

மாலை 6.00 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வரும் பொது மக்களுக்கு அவசர காரியமோ அல்லது மருத்து தேவையோ இல்லாதோரைக் காவல் துறை கைது செய்யும் எனும் சமூக ஊடகத்தில் பரவி வரும் காணொலியில் உண்மையில்லை என காவல் துறை தெரிவித்துள்ளது.

செந்துல் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி பெ எங் லாய் தெரிவிக்கயில், Kepong Community எனும் முகநூல் பக்கத்தில் வெளிவந்துள்ள அந்தக் காணொலியில் தேசியக் காவல்துறை தலைவரின் பெயரையும் குறிப்பிட்டு அவர் வெளியிட்ட ஆணை அதுவெனத் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.

அடிப்படைத் தேவைக்களுக்காக வணிகங்கள் இரவு 8.00 மணிவரையில் திறந்திருக்கின்ற நிலையில் பொது மக்கள் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் வெளியில் நடமாட ஜூன் 1 தொடங்கிய நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகாரத்துவத்தினரிடம் எவ்வித உறுதிப்பாடும் பெறாத எந்தத் தகவலையும் பொது மக்கள் பகிரவோ பரப்பவோ வேண்டாம் என பெ கேட்டுக் கொண்டார்.

இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை அறிக்கை ஒன்றினையும் அவர் திறந்துள்ளார்.

கோவிட்-19 தொடர்பான தவறானத் தகவலைப் பரப்புவது பொது அமைதிக்குக் குந்தகம் விளாஇவிக்கும் செயலாகும்.

பொது மக்களிடம் ஏதேனும் தகவல் இருந்தால், செந்துல் மாவட்டக் காவல்துறை செயலகத்தை 03-40482206 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பெ குறிப்பிட்டார்,

 “Orang ramai yang mempunyai sebarang maklumat boleh menghubungi Bilik Gerakan Ibu Pejabat Polis Daerah Sentul di 03-40482206,” katanya.