புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > தயார் நிலையில் 9ஆவது பாரா ஆசியான் போட்டி!
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

தயார் நிலையில் 9ஆவது பாரா ஆசியான் போட்டி!

கோலாலம்பூர், செப்.12-
9ஆவது பாரா ஆசியான் போட்டிக்கான விளையாட்டு இடங்கள், தங்கும் வசதிகள் முதலானவை நிறைவு பெற்றிருப்பதாக அதன் ஏற்பாட்டு குழு தலைவரும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமாகிய கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் இந்த பாரா ஆசியான் போட்டி வருகின்ற 17ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த போட்டியில் விளையாட்டாளர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கைரி ஜமாலுடின் கூறினார்.

இந்த போட்டியில் விளையாட்டாளர்களுக்கும் வருகையாளர்களுக்கும் தேவையான உதவிகளை வழங்க சுமார் 4 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளதாக தேசிய விளையாட்டாளர்களுடனான இறுதி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் சொன்னார்.

தங்குமிடங்களில் உணவகங்கள், மாற்றுத்திறனாளிகளின் வசதிகள் கொண்ட கழிவறை அல்லது குளியலறை, அவர்களுக்கு தேவையான சக்கரவண்டி உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தியுள்ளோம். இது தவிர்த்து வாகன நிறுத்துமிட வசதிகள், பஸ் சேவை, 1300 சிறப்பு அமருமிடங்கள் முதலானவற்றையும் நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். இபோட்டியில் பங்கேற்கவிருக்கும் தேசிய விளையாட்டாளர்களை தங்க வைப்பதற்காக 6 தங்கும்விடுதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் கைரி குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன