கோலாலம்பூர் | ஜூன் 11 :-
இன்று மலேசிய இந்தியர் காங்கிரசின் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் இரண்டாவது அரசியல் தலைவராக மாமன்னரைச் சந்தித்தார்.
அவரது சந்திப்பு ஏறத்தாழ ஒரு மணி நேரம் நீடித்தது.
காலை 10.46 மணிக்கு அரண்மனையின் இரண்டாவது நுழைவாயில் வழியாக வந்த தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் மீண்டும் காலை மணி 11.38 மணிக்குத் திரும்பினார்.
அங்கிருந்து தமது வெள்ளை நிற மெர்டசீஸ் வகைக் காரில் வெளியேறியவர் ஊடகவியலாளர்களைச் சந்திக்காமலேயே புறப்பட்டு சென்று விட்டார்.