அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > குவான் எங் மீது சட்ட நடவடிக்கையா?
சமூகம்மற்றவை

குவான் எங் மீது சட்ட நடவடிக்கையா?

கோலாலம்பூர், செப். 12-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை பற்றி அவதூறாக பேசிய லிம் குவான் எங் மீது சட்டத் துறை அலுவலகம் நடவடிக்கை எடுக்கும் வரை தாம் காத்திருக்கப் போவதாக அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ சுல்கிப்லி அகமட் தெரிவித்தார்.

சட்டத் துறை அலுவலகத்திலிருந்து பதில் கிடைத்த பின்னரே தாம் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கவிருப்பதாக அவர் கூறினார். மாஸ்ஜிட் ஜாமெக் மற்றும் பங்சார் எல்ஆர்டி ரயில் நிலையங்களில் நடைபெற்ற ஊழல் தடுப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், சட்டத் துறை அலுவலகம் எப்போது இது குறித்து தமக்கு பதிலை தரும் என்பது தமக்குத் தெரியாது என்றும் அவர் சொன்னார்.

கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி, பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் பீ பூன் போ மீதான கைது நடவடிக்கைக் குறித்து பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், ஊழல் தடுப்பு ஆணையம் பற்றி அவதூறான வகையில் அறிக்கை விடுத்தார். இதற்கு அவர் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் மன்னிப்பு கேட்க வெண்டுமென சுல்கிப்லி வலியுறுத்தினார்.

அவருக்கு அளிக்கப்பட்ட காலக் கெடு முடிவடைந்த பின்னர், சட்டத் துறை அலுவலகம் லிம் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார். எனினும், சட்டத் துறை அலுவலகம் இதுவரையில் இவ்விவகாரம் குறித்து பதிலளிக்கவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன