அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > தீவிரவாதத்தை துடைத்தொழிப்பதில் நஜிப்பின் பங்கை பாராட்டினார் டிராம்ப்!
முதன்மைச் செய்திகள்

தீவிரவாதத்தை துடைத்தொழிப்பதில் நஜிப்பின் பங்கை பாராட்டினார் டிராம்ப்!

வாஷிங்டன், செப்.13 –

தீவிரவாதத்தை துடைத்தொழிப்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஆற்றி வரும் பங்கை அமெரிக்க அதிபர் டோனால்ட் டிராம்ப் வெகுவாக பாராட்டியுள்ளார்.

மலேசியாவில் தீவிரவாத கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் நஜிப் ஆக்ககரமாக செயல்பட்டிருப்பதாக டிராம்ப் தெரிவித்தார்.குறிப்பாக  ஐ.எஸ் மற்றும் டாயிஷ் போன்ற தீவிரவாத கும்பல்களை அடியோடு ஒழிப்பதில் நஜிப் கடும் போக்கைக் கடைப்பிடிப்பதையும் டிராம்ப் பாராட்டினார்.

தீவிரவாதத்தை ஒழிப்பதில் மலேசியாவும் அமெரிக்காவும் ஒரே சிந்தனையைக் கொண்டுள்ளதாக டிராம்ப் குறிப்பிட்டார்.

முன்னதாக வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த டத்தோஸ்ரீ நஜிப்பை டோனால் டிராம்ப் மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.  செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை நஜிப் மூன்று நாட்கள் அமெரிக்க அலுவல் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாட்டு தலைவர்களுடம் நேரடி சந்திப்பு நடத்தியதுடன் இரண்டு நாடுகளின் அமைச்சர்கள் பேராளர்கள் குழுவுடனும் கூட்டம் நடைபெற்றது.

தமது அழைப்பின் பேரில் வாஷிங்டனுக்கு வருகைத் தந்தூள்ள நஜிப்புக்கு டிராம்ப் வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன