வியாழக்கிழமை, பிப்ரவரி 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > சமூகம் > ஒற்றுமையை வலுபடுத்தும் ஐபிஎப்பின் சுதந்திர கலை நிகழ்ச்சி
சமூகம்

ஒற்றுமையை வலுபடுத்தும் ஐபிஎப்பின் சுதந்திர கலை நிகழ்ச்சி

செமினி, செப். 13-

சுதந்திர தினம் மற்றும் தேசிய தினத்தையொட்டி ஐ.பி.எஃப் உலு லங்காட் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி இம்மாதம் 15ஆம் தேதி இரவு மணி 7.00க்கு செமினியில் ஸ்டோர் பேரங்காடி கார் நிறுத்துமிடத்தில் நடைபெறும் என்று ஐ.பி.எஃப் தேசிய தலைவர் டத்தோ எம்.சம்பந்தன் தெரிவித்தார்.

பழைய, புதிய பாடல்களோடு புகழ் பெற்ற உள்ளூர் கலைஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவும் வகையில் மடிக் கணினிகளும், ஆலயத்திற்கு நன்கொடையும், சிறுநீரக நோயாளி ஒருவருக்கு உதவித் தொகையும் வழங்கப்படும் என்று சம்பந்தன் கூறினார். இந்நிகழ்ச்சிக்கு சிலாங்கூர் தேசிய முன்னணி தலைவர் டான்ஸ்ரீ நோ ஒமார் சிறப்பு வருகை புரிவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

செமினி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோகானும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். சுற்று வட்டார மக்கள் சுதந்திர தினம் மற்றும் தேசிய தின கொண்டாட்டத்தில் திளைத்திருப்பதற்கு ஏதுவாக அதிர்ஷ்ட குலுக்கு உள்பட மேலும் பல சிறப்பு அங்கங்களும் இடம் பெறும் என்று அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் ஐ.பி.எஃப் சிலாங்கூர் தேர்தல் கேந்திரம் முடுக்கிவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திரளானோர் கலந்து கொள்ளும்படி சுற்று வட்டார மக்களை சம்பந்தன் கேட்டுக் கொண்டார். தேசிய முன்னணியின் ஆட்சியின் கீழ் நாடு அமைதியும், சுபிட்சமும் பெற்று பல்வேறு துறைகளில் பீடு நடை போட்டு வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மக்கள் தேசிய முன்னணியின் நடவடிக்கைகளுக்குத் தோள் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன