கோலாலம்பூர் | 15/7/2021 :-

இந்து சமய நற்பணி மன்றம் & தேசிய மஇகா இளைஞர் பிரிவின் தமிழ்மொழிக்குழு இணை ஏற்பாட்டில், கல்வி அமைச்சின் அங்கீகாரத்துடன், மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான தேசிய நிலையிலான போட்டி, ‘தளிர்த் தமிழ் விழா 2021’ நடத்தப்பட உள்ளது.

மலேசியாவில் உள்ள 527  தமிழ்ப் பள்ளிகளுக்கும்  மாநில கல்வி இலாகாவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக் கடிதம் வரும் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

 தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மன்ற தலைவர்களிடம் இருந்தும் போட்டிக்கான விவரங்கள் பகிரப்படும்.  பள்ளிப் பொறுப்பாசிரியர்கள் மட்டுமே தத்தம் பள்ளி மாணவர்களைப் பதிவு செய்தல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடத்தப்பட இருக்கும் போட்டிகளும் அதற்கான விதிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளக் கோப்பில் அடங்கியுள்ளன.

இவ்விழாவுக்கு ஜொகூர் மாநில மஇகா இளைஞர் பிரிவு, இந்திய இளைஞர் முன்னேற்றக் கழகம், மலேசியத் தமிழ்ப்பேச்சாளர் மன்றம், மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் ஆகியோர் இணை ஆதரவு வழங்குகிறார்கள்.