தோக்கியோ | 29/7/2021 :-
இம்முறை நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கப்பதக்கச் சாதனையைப் படைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட சில விளையாட்டுகளில் முக்குளிப்பும் ஒன்று. ஆனால், 10 மீட்டர் பெண்களுக்கானப் போட்டியில் நாட்டின் முக்குளீப்பு வீராங்கலை பண்டேலேலா ரினோங், லியோங் மான் யீ இணையினர் இறுதி இடத்தைப் பிடித்ததில் அந்தச் சாதனையைப் படைக்க முடியாமல் போனது.
முதல் சுற்றில் இரண்டாம் நிலையிலும், இரண்டாம் சுற்றில் மூன்றாம் இடத்திலும் தங்களின் அடைவுநிலையைப் பதிவு செய்த பெண்டேலேலா – மான் யீ இணையினர் மூன்றாவது சுற்றில் எற்பட்ட சிறு தவற்றால் ஏழாவது இடத்தைப் பிடித்தனர்.
ஒட்டு மொத்தமாகப் புள்ளிகளின் அடிப்படையில் 277.98 மதிப்பெண்கள் பெற்று அவர்கள் கடைசி இடத்தைப் பிடித்தனர்.
தங்களால் இயன்ற முழு முயற்சியைச் செய்து விட்டோம். இருந்தும் எங்களால் பதக்கம் பெற முடியவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
இரட்டையர் பிரிவில் தோல்வியைத் தழுவினாலும் எதிர்வரும் 4/8/2021 ஆம் நாள் நடக்கவிருக்கும் 10 மீட்டர் ஒற்றஒயர் பிரிவில் முந்தையத் தோல்விக்கு ஈடுகட்டும் வகையில் தாம் களம் புக இருப்பதாக 28 வயது பண்டேலேலா தெரிவித்துள்ளார்.

