தோக்கியோ | 29/7/2021 :-

அம்பெய்யும் போட்டியில் மலேசிய வில்லாளர் கைருல் அனுவார் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். முந்தையச் சுற்றில் பின்லாந்தைச் சேர்ந்த Antti Vikstrom கொடுத்த கடுமையானப் போட்டியால் அச்சுற்று மிகுந்த சவாலாக இருந்தது.

முந்தையச் சுற்றுகளில் சற்றே கவனம் சிதறி விட்டதால் மிகச் சிறந்த அடைவு நிலையைப் பதிவு செய்ய முடியவில்லை எனவும் மூன்றாம் சுற்றில் முழு கவனத்துடன் ஆட்டத்தை எதிர்கொள்ள இருப்பதாகவும் திரங்கானுவின் கெமாமான் நகரைச் சேர்ந்த கைருல் அனுவார் தெரிவித்தார்.

நாளை மறுநாள் சனிக்கிழமை (30/7/2021) நடக்கவிருக்கும் மூன்றாம் சுற்றுக்கு முன்னர் கடுமையானப் பயிற்சியை மேற்கொண்ட பிறகே களத்தில் இறங்க இருப்பதாக கைருல் அனுவார் தெரிவித்தார்.