கோலாலம்பூர் | 31/7/2021:-

பிரதமர் மகியாதீன் முகம்மது யாசின்  பதவி விலக வேண்டும் எனும் நோக்கத்திற்காக #Lawan பேரணி இன்று நடந்து வருகிறது. அப்போராட்டத்திற்காக டத்தாரான் மெர்டேகாவுக்கு அணிவகுத்துச் செல்வதற்கு முன்னதாக, கருப்பு உடையில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மஸ்ஜித் ஜாமெக் பகுதியில் திரண்டனர்.

சிலர் Kerajaan Gagal தோல்வி அடைந்த அரசாங்கம் எனும் வாசகத்தைக் கொண்ட பாதகைகளையும் எணாஇயோர் கருப்புக் கொடியையும் ஏந்தி வந்தனர்.

கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள்வதில் நடப்பு அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது என அவர்கள் அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டினர்.

இன்னும் ஒரு சிலர் கோவிட்-19 பெருந்தொற்றால் மரண எண்ணிக்கை அதிகரித்து வருவதைச் சுட்டிக் காட்டும் வகையில் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட சடல உருவங்களை ஏந்தி வந்தனர்.

ஏறத்தாழ 200 ஆர்ப்பாட்டக்காரர்கள் டத்தாரான் மெற்டேகாவைச் சுற்றித் திரண்டனர். ஆனால், அவர்களை காவல்துறை அங்கு நுழையவிடாமல் தடுத்தனர்.

ஏறத்தாழ 1,000 பேர் இப்பேரணியில் கலந்து கொள்வார்கள் என அதன் ஏற்பாட்டாளர் தெரிவித்தனர்.

பெரும்பான்மையாக இளைஞர்கள் கலந்து கொண்டிருந்தாலும்பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் தியான் சுவா உட்பட சில மூத்த ரசியல் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.