கோலாலம்பூர் | 31/7/2021 :-
இன்று தலைநகர் டத்தாரான் மெர்டேக்கா அருகே #Lawan பேரணியில் கலந்து கொண்டவர்களை காவல்துறை அழைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாங் வாங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி முகம்மட் ஸைனால் அப்துல்லா இது குறித்து தெரிவிக்கயில், மிக அமைதியான முறையில் அப்பேரணி நடத்தப்பட்டிருந்தாலும், 400 பேர் அதன் தொடர்பில் கூடியதால் அது ஒரு விதி மீறல் ஆகும் என அவர் குறிப்பிட்டார்.
தொற்று நோய்த் தடுப்பு – கட்டுப்பாட்டுச் சட்டம் (தேசிய மீட்சித் திட்டம்) 2021 விதிமுறை 10இன் படி அப்பேரணி விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் இன்று தெரிவித்தார்.
சமயம், சமூகம், விளையாட்டு, திருமணம், பண்பாடு சார்ந்த எந்த விவகாரங்கள் தொடர்பாகவும் எந்த இடத்திலும் யாரும் ஒன்று கூடக்கூடாது என்பது விதிமுறை.
அப்பேரணியாளர்கள் மெர்டேக்கா சதுக்கத்தைக் குறி வைத்திருந்தனர். ஆகையால் அவர்கள் அங்கு நுழையாமல் காவல்துறாஇ தடுத்தது.
அதன் காரணமாக அவர்கள் மெர்டேக்கா சதுக்கத்தின் வெளியில் ஒன்று கூடினர். அவர்களை காவல்துறை கலைந்து போகச் சொன்னது.
அப்பேரணியாளர்கள் முகக்கவரிஐ அணிந்திருந்தாலும் கூடல் இடைவெளியைப் பின்பற்றவில்லை என ஏசிபி முகம்மட் ஸைனால் அப்துல்லா குறிப்பிட்டார்.
ஒருவருக்கொருவர் இடையிலான கூடல் இடைவெளியை நாம் கவனிக்கத் தவறுவதுண்டு. இருந்தும் அப்பேரணியின்போது யாரும் கைது செய்யப்படவில்லைஎனக் கூறிய ஏசிபி முகம்மட் ஸைனால் அப்துல்லா, அப்பேரணியைக் கட்டுப்படுத்த ஏறத்தாழ 300 பேர் பணியமர்த்தப்பட்டதாக அவர் சொன்னார்.

