கோலாலம்பூர் | 7/8/2021 :-

கடந்த நில நாட்களுக்கு முன்னர் அம்னோவைச் சார்ந்த அமைச்சர் பதவி விலகியதைத் தொடர்ந்து தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் நிலை தடுமாற்றத்தைச் சந்தித்துள்ளது.

இந்நிலையில், கட்சித் தாவல் குறித்து சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் கசிகின்றன.

பெரும்பான்மை இழந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் இது போன்றா சம்பவங்கள்பாரங்கேறி வருகின்றன.

தற்போது கோத்தா மலாக்கா நாடாமன்ற உறுப்பினர் கூ போய் தியோங்கிற்கும் கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கெல்வின் யீ-க்கும் அவ்வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதை அவ்விருவரும் அம்பலப்படுத்தியுள்ளனர்.

அவ்வாய்ப்பு குறித்துத் தமக்கு அனுப்பப்பட்ட புலனச் செய்தியை வெளியிட்ட கூ போய் தியோங், தமக்கு அறிமுகமில்லாத கைப்பேசி எண்ணில் இருந்து அந்தக் குறுஞ்செய்தி வந்ததாகவும், தற்போது காலியாக இருக்கும் இரு அமைச்சர் பதவி குறித்தும் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

லிம் குடும்பத்தாரின் நிழலில் இருந்து வெளிவரச் செல்லியும் தர்போதைய அரசாங்கத்தில் மலாய்க்காரர் அல்லாதோர் நிகராளிகள் தேவைப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஜ.செ.க. கட்சியைச் சேர்ந்தவர் கூ போய் தியோங்.

மேலும், ‘டுரியான் ரி.ம. 30’உம் அமைச்சர் பதவியும் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டதாகவும் அதன் பொருள் விளங்கப்பட வில்லை என்றாலும் அந்த பதிப்பு உடனடியாக வழங்கப்பட்டு விடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது

ஆனால், கூ போய் தியோங் அந்தக் குறுஞ்செய்திக்குப் பதிலளிக்க வில்லை எனக் கூறினார்.

விற்பனைக்கல்ல

தமக்கு வந்தக் குறுஞ்செய்தியை முகநூல் பக்கத்தில் பகிர்ந்த கூ போய் தியோங், ‘கோத்தா மலாக்கா விற்பனைக்கல்ல’ எனப் பதிவிட்டிருந்தார்.

மேலும், வேறு உஆருக்காவது அமைச்சராக வேண்டும் எனும் எண்ணம் இருந்தால் அந்தக் குறுஞ்செய்தி அனுப்பியவரைத் தொடர்பு கொள்ளலாம் என நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.

மற்றொரு நிலவரத்தில், கூச்சிங் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கெல்வின் யீ-க்கும் அவ்வாறானக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாகத் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

தற்போது தங்களின் மதிப்பை டுரியானைக் கொண்டு மதிப்பிடப்படுவதாகத் தெரிவித்தார்.