தோக்கியோ | 8/8/2021 :-

இம்முறாஇ நடந்த தோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் மலேசிய சைக்கிளோட்ட வீரர் டத்தோ அஸிஸுல்ஹஸ்னி அவாங் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இன்றூ நடந்த இறுதிப் போட்டியில் டத்தோ அஸிஸுல்ஹஸ்னி முதலிடத்தைப் பிடித்த பிரிட்டனின் ஜேசன் கென்னியைக் காட்டிலும் 0.763 வினாடிகள் பின் தங்கி இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

வெண்கலப் பதக்கத்தை நெதர்லாந்தின் Harrie Lavreysen வென்றார்.

திரங்கானுவின் டுங்கூனில் பிறந்த டத்தோ அஸிஸுல்ஹஸ்னி தமது முதல் ஒலிம்பிக் பதக்கமான வெண்கலத்தை 2016ஆம் ஆண்டி பிரேசில் நாட்டின் ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வென்றார்.

முன்னதாக, 2012 ஆம் ஆண்டில் இலண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஆறவது இடத்தைப் பிடித்திருந்தார்.