*நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை

செவ்வாய், 10 ஆகஸ்டு
மடை திறந்து அத்தியாயம் 2: உயிரே (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), மாலை 5 மணி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
பாடகர்கள்: ஹரிஹரன், மஞ்சரி, லாவண்யா & சந்திராயினி
ஹரிஹரன், மஞ்சரி, லாவண்யா மற்றும் சந்திராயினி உட்படப் புகழ்பெற்றப் பின்னணிப் பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் இவ்விசை நிகழ்ச்சியில் பங்கேற்ப்பர். புகழ்பெற்றப் பின்னணி பாடகர், ஹரிஹரனின் சிறந்தப் பாடல்கள் இதில் இடம்பெறும்.

மங்களம் vs அம்புஜம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), மாலை 5 மணி |ஆஸ்ட்ரோ கோ
மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: வி.சூரியமூர்த்தி, கமலநாதன், கோகிலா, எஸ். ஜமுனா ராணி & அபிஷேக் ஜெயக்குமார்
நடுத்தர வயதுப் பெண்களான அம்புஜமும் மங்களமும் சிறந்த எதிரிகள்! அண்டைவீட்டுக்கார்களான இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.

கோல்மால் 3 (Golmaal 3) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 10.30 மணி | ஆஸ்ட்ரோ கோ
வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: அஜய் தேவ்கன், அர்ஷத் வார்ச்சி, கரீனா கபூர் & குணால் கேமு
ப்ரீதம் பல வருடங்களுக்குப் பிறகுக் கீதாவை மீண்டும் சந்திக்கிறார். அவர்கள் இருவரும் திருமணம் செய்யதுக் கொள்ள திட்டமிடுகையில் அவர்களின் குழந்தைகளுக்கிடையேயானச் சண்டை அவர்களைத் தடுக்கிறது.

கர்ணன் (அலைவரிசை முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), இரவு 9.30 மணி |ஆஸ்ட்ரோ கோ
மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: தனுஷ், லால், யோகி பாபு, நடராஜன் சுப்ரமணியம் & ரஜிஷா விஜயன்
கோபமடைந்த இளைஞன் ஒருவன் தன் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடுகிறான். அதிகாரம் மற்றும் ஆயுதங்களை ஏந்தியவர்களிடமிருந்து தன் மக்களை அவனால் காப்பாற்ற முடியுமா?

வியாழன், 12 ஆகஸ்டு
தமிழ்லட்சுமி சீசன் 2 (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), இரவு 9.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ
மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: ஹேமாஜி, மூன் நிலா, நித்யஸ்ரீ, சீலன் மனோகரன், ஜேம்ஸ் தேவன் ஆரோக்கியசாமி & தேவேந்திரன் சரிமிர்கன்
மூன்றுத் திருமணமானப் பெண்கள் தங்கள் திருமணம் மற்றும் வேலை வாழ்க்கையில் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளை இத்தொடர் சித்தறிக்கின்றது. மேற்பரப்பில் ஒரு அழகான மற்றும் சரியானப் புறநகர் பகுதி போல் தெரிந்தாலும் மூடிய கதவுகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் குடும்பப் போராட்டங்கள், குடும்ப வாழ்க்கை, இரகசியங்களை எதிர்க்கொள்ளுதல், குற்றங்கள் மற்றும் மர்மங்கள் ஆகியவற்றை இத்தொடரின் கதைச் சித்தறிக்கின்றது.

ஹலஹால் (Halahal) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ
வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: சச்சின் கேடேகர் & பருன் சோப்தி
தனது அன்பு மகளின் மரணத்திற்கான உண்மையை வெளிக்கொணரத் துயரமடைந்த ஒரு மருத்துவர், ஊழல் நிறைந்த ஒரு காவல்துறை அதிகாரியுடன் கைக்கோர்க்கிறார்.

வெள்ளி, 13 ஆகஸ்டு
வேட்டை நாய் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ
மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்: ராம்கி & ஆர்.கே. சுரேஷ்
தனது காதலியை மணந்தவுடன் ஒரு ரவுடியின் வாழ்க்கை மாறுகிறது. ஆனால், பலர் அவனைத் தாக்கத் தயாராக இருப்பதை அவன் உணரவில்லை.

சனி, 14 ஆகஸ்டு
சலாமி (Salaami) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), மதியம் 2.30 மணி | ஆஸ்ட்ரோ கோ
வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்
நடிகர்கள்: அயூப் கான் & சம்யுக்தா சிங்
விஜய் என்ற இளம் இராணுவ வீரர், ஊழலில் ஈடுபடும் அதிகாரியானக் கௌத்தமுக்கு எதிரான ஆதாரங்களைக் கண்டறிகிறார். எனவே, அவருக்கும் காவல்துறையினருக்கும் இடையில் பல மோதல்கள் ஏற்படுகின்றன. இதனால், அவரது தொழிலும் குடும்பமும் அச்சுறுத்தப்படுகின்றன.