அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > மாணவர்கள் தங்கியிருந்த அறையில் எரிவாயு கலன்களா?
மற்றவைமுதன்மைச் செய்திகள்

மாணவர்கள் தங்கியிருந்த அறையில் எரிவாயு கலன்களா?

கோலாலம்பூர், செப்.14-
சமய பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் பலியான செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நிகழ்ந்ததற்கான மூல காரணம் குறித்து கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

தொடக்கத்தில் இந்த தீ விபத்திற்கு மின்கசிவு, கொசு மருந்து ஆகியவை காரணங்களாக இருக்கலாம் என கூறப்பட்டது. அதோடு, அந்த பள்ளியில் தீயை அணைக்கும் கருவி இல்லாதது தெரிய வந்துள்ளதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் தலைமை துணை இயக்குநர் டத்தோ சைமன் ஜாஹிட் தெரிவித்தார்.

இது குறித்து விளக்கம் அளிக்க அதன் நிர்வாகத்தினர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். இந்நிலையில், அந்த மாணவர்கள் படுத்திருந்த அறையில் இரண்டு எரிவாயு கலன்கள் இருந்ததாகவும் அது குறித்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு துறை கூறினால் மட்டுமே இந்த விபத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன