அண்மையச் செய்திகள்
முகப்பு > உலகம் > வியட்நாமில் பயங்கர புயல்: மக்கள் வெளியேற்றம்
உலகம்

வியட்நாமில் பயங்கர புயல்: மக்கள் வெளியேற்றம்

ஹனோய், செப் 15-

வியட்நாமை டோக்சுரி புயல் பயங்கரமாக தாக்கதியதால் 80,000 மேற்பட்ட பொது  மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்று காலை மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஹா டின்ஹ் மற்றும் குவாங் பின்ஹ் ஆகிய பகுதிகளில் புயல் கடுமையாக தாக்கியதால் 250-க்கும் அதிகமான வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தன. புயலுடன் பெய்த பலத்த மழையால் ஹா டின்ஹ் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.  மரங்கள், விளக்கு கம்பங்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் பல இடங்களில் சாய்ந்து விழுந்ததால் இவ்விரு மாகாணங்களிலும் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

புயல் தொடர்பான எச்சரிக்கையை தொடர்ந்து கடற்கரை ஓரங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த சுமார் 80,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன