கோலாலம்பூர் | 23/8/2021 :-

தேசிய மீட்சி மன்றத்திலும் கோவிட்-19 சிறப்புப் பணிக் குழுவிலும் இணைந்து கொள்ள எதிர்க்கட்சிகளுக்குப் பிரதமர் விடுத்த அழைப்பு வரவேற்கத்தக்கது என பிகேஆர் கூறியது. ஆனால், அதன் உட்கூறுகள் குறித்து முழுமையாக அறியாமல் எந்தவித முடிவும் எடுக்கப்படாது என பிகேஆர் கட்சியின் தொடர்புப் பிரிவுத் தலைவர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்தார்.

மாமன்னர் கூறியது போல, கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாளவும் மந்தமாகியுள்ளப் பொருளாதாரத்தை மீட்சி பெறச் செய்யவும்; இதனால் மக்கள் காக்கப்படுவதும் உறுதி செய்யப்படுமா என்பது குறித்து அலசி ஆராய வேண்டியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மிக விரைவில் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவரான அன்வார் இபுராகிமைப் பிரதமர் சந்திக்க எண்ணம் கொண்டிருப்பதாக ஃபாஹ்மி கூறினார்.

கோலாலம்பூர் | 23/8/2021 :-

தேசிய மீட்சி மன்றத்திலும் கோவிட்-19 சிறப்புப் பணிக் குழுவிலும் இணைந்து கொள்ள எதிர்க்கட்சிகளுக்குப் பிரதமர் விடுத்த அழைப்பு வரவேற்கத்தக்கது என பிகேஆர் கூறியது. ஆனால், அதன் உட்கூறுகள் குறித்து முழுமையாக அறியாமல் எந்தவித முடிவும் எடுக்கப்படாது என பிகேஆர் கட்சியின் டாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்தார்.