முகப்பு > மற்றவை > பிபிபிஎம் கட்சியிலிருந்து வெளியேறினார் அனினா!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

பிபிபிஎம் கட்சியிலிருந்து வெளியேறினார் அனினா!

கோலாலம்பூர், செப்.16-

பிபிபிஎம் கட்சியின் தோற்றுநர்களில் ஒருவரான அனினா சாடூடின் இன்று அக்கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

அக்கட்சி அதன் கொள்கையிலிருந்து தடம் மாறியதாக கூறிய அவர், குற்ப்பிட்ட ஒரு சிலரின் அரசியல் நோக்கத்திற்காக தாம் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றச்சாட்டை சுமத்தினார்.

மேலும், என்னை மிக மோசமான முறையில் கட்சியின் மகளிர் தலைவி பொறுப்பிலிருந்து நீக்கியதொடு உச்சமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கினர். அதோடு, கடந்த 9ஆம் தேதி மூவாரில் நடைபெற்ற அக்கட்சியின் ஓராண்டு நிறைவு விழாவிற்கும் எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

மக்களின் நலனை பேணுவதற்காக தோற்றுவிக்கப்பட்ட அக்கட்சி இப்போது நீதி, உண்மை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை அதன் நிர்வாகம் மற்றும் போராட்டங்களில் கொண்டிருக்கவில்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் அனினா கூறினார்.

பிபிபிஎம் கட்சி அடிமட்ட உறுப்பினர்களின் கருத்துகளுக்கும் செவி சாய்க்க வேண்டும். மாறாக, அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க கூடாது என அவர் சொன்னார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன