கோலாலம்பூர் | 10/9/2021 :
பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியானச் ‘சர்வைவர்’, அதிரடி நாடகப் திரைப்படம் ‘ஒன்’, இசை நிகழ்ச்சியான ‘மடை திறந்து பகுதி 3: இருவர்’, நாடகத் டெலிமூவியான ‘ஜில்லென்று ஒரு கலவரம்’, உள்ளூர் இசை நிகழ்ச்சியான ‘என் மலேசியா, உன் மலேசியா, நம் மலேசியா’ உட்பட செப்டம்பர் 13 முதல் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணும் மேலும் அதிகமான உள்ளூர், அனைத்துலகத் தமிழ் நிகழ்ச்சிகளை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்.
‘சர்வைவர்’ எனும் அதே பெயரில் அனைத்துலக அளவில் புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியின் முதல் ஒளிபரப்பை வாடிக்கையாளர்கள் எதிர்ப்பார்க்கலாம். எண்ணிலடங்கா விருதுகளை வென்று குவித்த கோலிவுட் நடிகர், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் தொகுத்து வழங்கும் இத்தொடர், போட்டியாளர்கள் தங்களின் எல்லைகளையும் அச்சங்களையும் ஒரு புறம் ஒதுக்கித் தள்ளி, சான்சிபார் தீவில் உயிர்வாழ்வதற்கான மன வலிமையையும் உறுதியையும் நிரூபிக்கும் வண்ணம் அவர்களின் நிலையையும் வலிமையையும் சோதிக்கும்.
வி.ஜே.பார்வதி, விஜயலட்சுமி அகத்தியன், பெசன்ட் ரவி, காயத்திரி ரெட்டி, நந்தா தொரைராஜ், ஸ்ருஷ்டி டாங்கே, உமாபதி ராமையா, விக்ரந்த் சந்தோஷ் ஆகியோருடன் பல நாடுகளைச் சேர்ந்த 18 போட்டியாளர்களிடையே நிலவும் கடுமையானப் போட்டியை இத்தொடர் சித்தரிக்கும். ‘சர்வைவர்’, செப்டம்பர் 13 முதல் இரவு 9.30 மணிக்குச் ஜீ தமிழ் எச்டி (அலைவரிசை 223), ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
அதுமட்டும்மன்றி, செப்டம்பர் 16 அன்று முதல் ஒளிபரப்புக் காணும் பின்வரும் நிகழ்ச்சிகளை வாடிக்கையாளர்கள் கண்டு மகிழலாம்:
- சந்தோஷ் விஸ்வநாத் கைவண்ணத்தில் மலர்ந்த, மம்மூட்டி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் அதிரடி நாடகத் திரைப்படம, ‘ஒன்’. ஒரு சிறந்த முதல்வரின் கடமைகளுடன் அரசியல், நிர்வாகச் சித்தாந்தங்களை இத்திரைப்படம் சித்தரிக்கிறது. ‘ஒன்’, இரவு 9.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
- ஸ்ரீநிவாஸ், விஜய் பிரகாஷ், சரண்யா ஸ்ரீநிவாஸ், ஹரிபிரியா உட்படப் புகழ்பெற்றப் பின்னணிப் பாடகர்களும் இசைக்கலைஞர்களும் பங்கேற்க்கும் ‘மடை திறந்து பகுதி 3: இருவர்’ எனும் இசை நிகழ்ச்சி. புகழ்பெற்றப் பின்னணிப் பாடகர் ஸ்ரீநிவாஸின் 25 ஆண்டு பாடகர் பயணத்தைக் கொண்டாடும் இந்த இசை நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
- குணாளன் மோர்கன், கலைவாணி சமந்தா, பிரகாஷ் அரசு, துர்காஷினி, ஹரி பிரசாந்த் ஆகியோர் நடித்த நாடக டெலிமூவி, ‘ஜில்லென்று ஒரு கலவரம்’. தொடர்ச்சியான மர்மமான நிகழ்வுகளுக்குப் பிறகு தங்களின் ஆத்மா வேறொருவரின் உடல்களில் மாறிக் கொண்டதை ஒரு குடும்பத்தினர் அறிவதோடுத் தங்களின் அன்புக்குரியவர்களைப் புரிந்துக்கொள்வதற்கானச் சிறந்த வழிகளையும் உணர்கின்றனர்.
- ‘ஜில்லென்று ஒரு கலவரம்’, மாலை 5 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
- உள்ளூர் திறமையாளர்களான சந்தேஷ், யூனோஹூ, ஹேவோக் மதன், ஹேவோக் நவின், லாக் அப் நாதன், அமோஸ் பால், பலரை தாங்கி மலரும் உள்ளூர் இசை நிகழ்ச்சி, ‘என் மலேசியா, உன் மலேசியா, நம் மலேசியா’ மாலை 7.30 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணுகிறது.
மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.