கோலாலம்பூர் | 21/9/2021 :-

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 18 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களில் 44 விழுக்காட்டினர் ஒரு ஆசிரியரின் ஆபசப் பகடியைச் சந்தித்திருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

மேலும் 45 % பெண்கள் அவ்வாறானச் சூழலைச் சந்தித்தது இல்லை எனத் தெரிவித்திருந்தாலும் எஞ்சொய 11 விழுக்காட்டினர் அது பற்றிய உறுதியாகத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கோலாலம்பூரை மையமாகக் கொண்ட Cent-GPS எனும் அரசியல் அறிவியல், சமூகவியல் அமைப்பும் All Women’s Action Society (Awam) பெண்கள் அமைப்பு சேர்ந்து கடந்த 24/8/2021 முதல் 15/9/2021 வரையில் நடத்திய ஆய்வில் அத்தகவல் தெரியவந்துள்ளது,

கணினியில் நடத்தப்பட்ட னத ஆய்வில் கலந்து கொண்டவர்கள் பதிலளித்துள்ளனர்.

அந்த ஆய்வில் கலந்து கொண்ட 1056 பேரில்,

79% மலாய்க்காரர்கள்
21 % மலாய்க்காரர் அல்லாதவர்கள்

78% ரி.ம. 2,000க்கும் குறைவான ஊதியம் பெறுபவர்கள்
15% ரி.ம. 2,001 முதல் ரி.மா. 4,000 வரையில் ஊதியம் பெறுபவர்கள்
4% ரி.ம. 4,001 முதல் ரி.மா. 6,000 வரையில் ஊதியம் பெறுபவர்கள்
3% ரி.ம. 6,001 க்கும் மேல்  ஊதியம் பெறுபவர்கள்

நாடு தழுவிய நிலையில் பல மாநிலங்களில் இருந்து இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் 57 விழுக்காட்டினர் சாலையில் நடந்து செல்லும் போது வாய்மொழி அளவில் பாலியல் தொந்தரவுக்கு இலக்காகி இருப்பதாகவும் அவற்றில் 22 பேருக்கு குறைந்தது ஒரு முறையாவது அவ்வாறு நேர்ந்திருப்பதாகவும் அவ்வறிக்கை கூறுகிறது.

இவ்வாறு தொடர்ந்து நடப்பதால் தாங்கள் கடந்த வரும் வழிப்பாதையை மாற்றும் முடிவு பற்றி வினவியபோது, 71 விழுக்காட்டினர் தங்கள் வழிப்பாதையை மாற்றியதாகவும் 26 விழுக்காட்டினர் மாற்றவில்லை எனவும் 3% பெண்கள் உறுதியாகத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளனர்.

தனியாக திரையரங்குகளில் படம் பார்ப்பதில் 52 விழுக்காட்டுப் பெண்களுக்கும் இரவில் தனியான வாகனத்தை செலுத்த 68 விழுக்காட்டுப் பெண்களுக்கும் அச்சமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வறிக்கை தொடக்கக் கட்டத்தில் இருந்தாலும் இவ்விவகாரம் குறித்து நாட்டின் தலைவர்கள் கவனம் செலுத்துவார்கள் என Cent-GPS எதிர்ப்பார்க்கிறது.

ஆனால், பெரும்பான்மை ஆண்கள் தனியாக திரையரங்குகளில் படம் பார்ப்பதற்கும் இரவில் தனியான வாகனத்தை செலுத்துவதற்கும் பயந்ததில்லை.

அனைவருக்கும் பொதுவான அன்றாட நடவடிக்கைகளால் இரண்டு வெவ்வேறு உலகத்தில் பிரிந்து வாந்து கொண்டிருக்கிறோம் என Cent-GPS தெரிவித்துள்ளது.

அந்த ஆய்வில் முழு அறிக்கையை இங்கு காணலாம்.