புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மொத்த இழப்பு எனக்கு தெரியாது – மஹாதீர்
முதன்மைச் செய்திகள்

மொத்த இழப்பு எனக்கு தெரியாது – மஹாதீர்

கோலாலம்பூர், செப்.18 –

1990 ஆம் ஆண்டுத் தொடங்கி 1994 ஆம் ஆண்டு வரை வெளிநாட்டு நாணய பரிவர்த்தனையில் மலேசியாவுக்கு ஏற்பட்ட இழப்பின் மொத்த தொகை தமக்கு தெரியாது என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மஹாதீர் முஹமட் தெரிவித்துள்ளார்.

பேங்க் நெகாராவின் வெளிநாட்டு நாணய பரிவர்த்தனையில்  ஏற்பட்ட இழப்பு குறித்து அமைக்கப்பட்டுள்ள அரச விசாரணை ஆணையத்திடம் ( ஆர்.ஐ.சி ) திங்கட்கிழமை சாட்சியம் அளித்த மஹாதீர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த இழப்பு குறித்து தமக்கு எந்த ஓர் எழுத்துபூர்வமான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என மஹாதீர் கூறினார்.நாடாளுமன்றத்தில் அப்போதைய நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த அறிக்கையை வைத்தே அதன் மொத்த இழப்பை தாம் தெரிந்து கொண்டதாக மஹாதீர் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு பின்னர் தாம் மீண்டும் அன்வாரையும்,  நிதி அமைச்சின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ  கிலிப்போர்ட் பிரான்சிஸ் பெர்பெர்ட்டையும் பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தாக மஹாதீர் கூறினார்.

ஆனால் வெளிநாட்டு நாணய பரிவர்த்தனையில் மூவாயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தம்மிடம் தெரிவிக்கப்படவில்லை என மஹாதீர் தெரிவித்தார். மாறாக அதன் இழப்பு 500 கோடி ரிங்கிட் மட்டுமே என தம்மிடம் அன்வார் கூறியதாக மஹாதீர் தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பேங்க் நெகாராவின் விவகாரங்களில் தலையிட தமக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் சொன்னார். முன்னதாக காலை 10.45 மணி அளவில் ஆர்.சி.ஐ-யில் சாட்சியம் அளிக்க மஹாதீர் புத்ராஜெயா நீதிமன்றத்துக்கு வந்தார்.

1990 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு நாணய பரிவர்த்தனையில் மலேசியா 1000 கோடி அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டதாக பேங்க் நெகாராவின் முன்னாள் துணை கவர்னர் டத்தோ அப்துல் மூராட் காலிட் குற்றஞ்சாட்டியதை அடுத்து அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன